sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

இளமையில் முதுமை; முதுமையில் இளமை

/

இளமையில் முதுமை; முதுமையில் இளமை

இளமையில் முதுமை; முதுமையில் இளமை

இளமையில் முதுமை; முதுமையில் இளமை


PUBLISHED ON : ஜூலை 11, 2010

Google News

PUBLISHED ON : ஜூலை 11, 2010


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒருவர் 80 வயதின் போது, 50 வயது போல தோற்றம் அளிப்பார்; 40 வயது உள்ளவர், 70 வயது உள்ளவர் போல தோற்றம் அளிப்பார். இந்த மாற்றத்தை தருவது, நமது உடலிலுள்ள ரத்தக் குழாய்கள் தான். ரத்தக் குழாய்களின் ஆரோக்கியம் தான், நம் உடலின் ஆரோக்கியம். உச்சந் தலையி லிருந்து உள்ளங்கால் வரை, ரத்தக் குழாய்கள் தான் திசுக்களுக்கு ரத்தத்தை கொடுக்கின்றன. கண்ணுக்கு புலம்படாத பல  லட்ச நுண்ரத்தக் குழாய்கள் உடலில் உள்ளன. இதயத்தின் இடது பகுதியில் துவங்கும் ரத்தக் குழாய், மகா தமனியாக வெளியே வந்து, உடலுடன் எல்லா உறுப்புகளுக்கும் பிரிவுகளாக சென்று ரத்தம் கொடுத்து, உடலிலுள்ள உறுப்புகள் அனைத்தையும் உயிர் வாழ வைக்கிறது. இது ஆரோக்கியமாக இருந்தால், மனிதன் ஆரோக்கியமாக இருக்க முடியும்.நமது உடலிலுள்ள திசுக்கள் அழியும் தன்மை உடையது. நமது உடலிலுள்ள தோல் நமக்கு தெரியாமல் உதிர்ந்து, புதிய மேல் தோல் திசுக்கள் உண்டாகின்றன; முடியும் வருகிறது. இந்த தோலுக்கு அடியில், பல்லாயிரக்கணக்கான நுண் ரத்த நாளங்கள் இருக்கின்றன. இவைகள் ஆரோக்கியமாக, சுருங்காமல், இறுக்காமல் இருந்தால், தோல் சுருங்காமல் இளமையாக இருக்கும். இதே போல் மற்ற உறுப்புகளின் ஆரோக்கியமும் நிர்ணயிக்கப்படுகிறது. நம் வாழ்க்கை தரம், தனி மனித ஒழுக்கம், நடை பயிற்சி, யோகா, இயற்கையான உணவு வகைகள், அமைதி, பொறுமை, எளிமை ஆகியவை உடலிலுள்ள ரத்த நாளத்தை ஆரோக்கியமாக வைக்கிறது. புகை பிடித்தல், லாகிரி வஸ்துக்கள் உபயோகப்படுத்துவது, சீட்டாடுவது, சிங்காரிகளோடு  சகவாசம் வைத்து, நெறியற்ற வாழ்வு வாழ்வது ஆகியவை, ரத்த நாளத்தை இறுக்கி விடும். இதனால் இதயம், சிறுநீரகம், மூளை, கண் சிதைவு ஆகியவை ஏற்படுகின்றன. இதனால் நடு வயது மரணம் ஏற்படுகிறது.



தமனி இறுக்க நோய், எந்த வயதில் வருகிறது? இந்த நோய் தாக்குவதற்கு காரணங்கள் பல உள்ளன. ரத்தக் குழாய், ரப்பர் குழாய் போல் விரிவடைந்து, சுருங்கும் தன்மை கொண்டது. எந்த அழுத்தத்தையும் தாங்கும் தன்மை கொண்டது. இந்த தன்மை கொண்ட ரத்தக் குழாய், ரத்த இறுக்க நோயால் இரும்பு குழாய் போல் ஆகி விடுகிறது. இதற்கு காரணங்கள்...



 நிக்கோடின் என்ற நச்சு பொருள். ரத்த நாளத்தின் உட்சுவரான என்டோதீலியத்தை பாதித்து, விரிசல் உண்டாக்கி விடுகிறது.  விரிசலில் கெட்ட கொழுப்பு நுழைந்து, ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுத்துகிறது. உடற்பயிற்சி, நடை பயிற்சி இல்லாததால், ரத்தக் குழாய் நலிவடைந்து விடுகிறது. அதிகமாக கொழுப்புள்ள மாமிசம், உணவு வகையிலுள்ள  கெட்ட கொழுப்புகள், ரத்த நாளத்தில் படர்ந்து, தடித்து விடும். இதனால், நிரந்தரமாக ரத்த அழுத்தம் ஏற்பட்டு விடுகிறது.  ரத்த அழுத்தத்தை குணமாக்க முடியாது; கட்டுப்பாட்டில் வைத்து கொள்ளலாம்.  இளமை: இளமையில் உடலிலுள்ள ரத்தக் குழாய்கள் அனைத்தும் சுருங்கி விரியும் தன்மை கொண்டதாக உள்ளது. இதனால், ரத்த ஓட்டம் சீராக உடலிலுள்ள எல்லா பகுதிகளுக்கும் செல்கிறது. த்ந்த தனித்தன்மையை காப்பாற்றுவது தான் மிக முக்கியமானது. உணவு வகைகள்: பணம் அதிகமாக கிடைக்கிறது என்று, ஜங்க்புட், ஹாட்புட், மது குடிப்பது, புகை பிடிப்பது, லாகிரி வஸ்துக்கள் உட்கொள்வது, சோம்பேறியான வாழ்க்கை ஆகியவை ரத்த நாளத்தை பாதித்து விடும். தயிர், வெண்ணெய், நெய் வைத்த  பாத்திரத்தை, அவை உபயோகித்த பிறகு, பாத்திரத்தின் உட்சுவரில் ஒட்டி இருப்பது போல தான், இந்த கெட்ட கொழுப்பு  படர்ந்து, ரத்த குழாயை சேதப்படுத்துகிறது.  இளமை பருவத்திலிருக்கும் ரத்தக் குழாயை பாதுகாத்து, அதே வடிவத்தில் கொண்டு செல்பவன் தான், ஆரோக்கியமான மனிதன். உடற்பயிற்சியால் ரத்த ஓட்டம் அதிகமாகிறது. காரணம் ரத்தக்குழாய் சுருங்கி விரிவடையும் தன்மை பாதுகாக்கப்படுகிறது. இதயமும், பலமுள்ளதாக பாதுகாக்கப்படுகிறது. இதயத் துடிப்பு காரணமாக, கரோனரி ரத்தக் குழாய் அடைப்பு ஏற்படுவதில்லை. மேலும், ரத்த ஓட்டம் போதுமான  அளவு சிறுநீரகத்திற்கு சென்று, சிறுநீரகத்தை பாதுகாக்கிறது. உடற்பயிற்சி செய்தவுடன், சிறுநீர் உந்துதல் ஏற்பட்டால்,  அது சிறுநீரகம் நன்கு செயல்படுகிறது என்பதற்கான அறிகுறி.   மேலும், உடற்பயிற்சி செய்யும் போது, சுத்தமான பிராண  வாயு மூளைக்கு செல்வதால், மூளை புத்துணர்வு பெறுகிறது. உடல் முழுவதும் புத்துணர்வு பெற்று, சுறுசுறுப்பாகிறது.

இந்த உண்மை எத்தனை பேருக்கு தெரிகிறது? 'எல்லாரும் நடைப்பயிற்சிக்கு செல்கின்றனர்; நாமும் செல்வோம்' என, ஷூ போட்டு போவது தான் முக்கியமாக தெரிகிறது. முதுமை: கோவில் குளங்களில் தண்ணீர் படியில் கால் வைக்கும்  போது, ஜாக்கிரதையாக வைக்கிறோம். ஏன்? காரணம், தண்ணீர் தேங்கிய படிகளில் பாசி படர்ந்து விடுகிறது. இதனால், கால் வழுக்கி குளத்தில் விழ வேண்டிய நிலை ஏற்படுகிறது.



அதுபோல ரத்தக் குழாய், ரத்த ஓட்டமில்லாமல் இருந்தாலோ, இல்லை ரத்த ஓட்டம் குறைவாக இருந்தாலோ, ரத்தத்திலுள்ள கெட்டக் கொழுப்பு, சர்க்கரை, ரத்தக் குழாய் சுவரின் உட்பகுதியில் படர்ந்து விடுகின்றன. நாளடைவில் ரத்தத்திலுள்ள தாதுப் பொருட்கள் அதன் மீது படிந்து, கட்டியாக மாறிவிடும். இதனால் மாரடைப்பு, மூளை ஸ்ட்ரோக்,  சிறுநீரக செயலிழப்பு, கால் மரத்து போதல் போன்ற சிக்கல் ஏற்படுத்தும்.  முதுமையில் ஒருவர், நீண்ட நாள் படுக்கையில்  இருந்தால், காலிலுள்ள ரத்த நாளத்தில் ரத்த ஓட்டமில்லாமல், ரத்தம் உறைந்து கட்டியாகி, நுரையீரல் தமனி அடைப்பு ஏற்படுத்தி, திடீர் மரணத்தை ஏற்படுத்துகிறது. இதே போல நீண்ட நேரம் கார் பயணம், விமான பயணத்தின் போது,  ரத்தம் உறைய வாய்ப்புள்ளது. முதுமையில் ஏற்படும் விளைவுகள் இவை.  எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். பந்து போல எழும்பி வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.  சமீபத்திய ஆய்வில் 60 முதல் 80 வரையுள்ள  சுறுசுறுப்பானவர்கள், தினம் நடைப்பயிற்சி, நல்ல உணவு வகை உண்டு, எளிமையாக, எங்கும், எப்போதும் எழுந்து நடமாடி, தூய்மையான எண்ணங்களுடன், சமுதாய நல குறிக்கோளுடன், தனி மனித ஒழுக்கத்துடன் திகழ்வதாக தெரிய வந்துள்ளது. முதியவர்களுக்கு காப்பீடும் கிடைக்காது; மருத்துவ செலவு அதிகம். பென்ஷன் பெறுபவர்களின்  பணப்பற்றாக்குறை, இவர்களை கண்டு கொள்ளாத பிள்ளைகள் என, தினமும் அவர்கள் அல்லாடுவதை பார்க்கிறேன்.

இத்தகைய முதியவர்களுக்கு, சுருங்கி விரியும் தன்மையான ரத்தக் குழாயும், தடைப்படாத ரத்த ஓட்டமும் கொடுக்க, இறைவனை வேண்டுகிறேன். மரணத்தை வெல்லலாம்; வளமுடன் வாழலாம். அது பலன் தரவில்லையெனில், உங்களுக்கு ரத்த அழுத்தம், இதய நோய் இல்லாத பட்சத்தில், வயாகரா போன்ற மாத்திரைகளை, டாக்டர்கள் பரிந்துரைக்கலாம். இந்த மாத்திரைகளை, ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக எடுத்து கொள்ள வேண்டும். சிலர் இதற்கென கருவிகள் பயன்படுத்துகின்றனர். சிலர் யோகா போன்ற உடற்பயிற்சிகளை செய்கின்றனர். உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதும், சீரான உடல் எடையுடன் இருத்தலும் மிக அவசியம்.



சி.கண்ணன், பேரூர்:








      Dinamalar
      Follow us