தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/டெல்டாவை 'ஓவர்டேக்'செய்யும் ஒமைக்ரான்!

டெல்டாவை 'ஓவர்டேக்'செய்யும் ஒமைக்ரான்!

டெல்டாவை 'ஓவர்டேக்'செய்யும் ஒமைக்ரான்!


PUBLISHED ON : ஜன 02, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 02, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சுவாச பாதையில் பிரச்னையை ஏற்படுத்தும், ஆர்.என்.ஏ., வகை வைரசில் மரபணு மாற்றம் ஏற்படுவது இயல்பான விஷயம். பல காலமாக இது போன்ற மாற்றங்கள் வைரசில் நடந்தே வந்துள்ளன. மரபணு மாற்றம் ஏற்படும் வைரசில், 99 சதவீதம் வைரஸ் உருவான மாத்திரத்தில், தானாகவே அழிந்தும் விடும். எப்போதாவது ஒரு சில வைரஸ் அபூர்வமாக, 'டெல்டா, ஒமைக்ரான்' போன்று வீரியத்துடன் மாற்றம் அடையும்.

டெல்டா தான் வீரியம் மிக்கது. இதைவிட வேகமாக பரவக் கூடிய இன்னொரு வைரஸ் வருவது கடினம் என்று நினைத்தோம்; அந்த நம்பிக்கையை ஒமைக்ரான் மாற்றி விட்டது. தென் ஆப்ரிக்காவின் ஜோகனஸ்பெர்க் நகரில் முதலில் ஒமைக்ரான் அடையாளம் காணப்பட்டது. வைரசில் ஏதேனும் மாற்றம் உள்ளதா என்பதை அறிய, அங்கு வாரம் ஒரு முறை ஆய்வுகள் செய்யப்படும். முடிவுகளில், 88 சதவீதம் டெல்டா தான் இருக்கும். ஆல்பா, பீட்டா ஒன்றிரண்டு மாதிரிகளில் தெரியும். நவம்பர் 12 - 19 வரை எடுத்த மாதிரியில், எல்லாமே ஒமைக்ரானாகவே இருந்தது; டெல்டா ஒன்று கூட இல்லை.

மரபணு மாற்றம் ஏற்பட்ட வைரஸ், இந்த வேகத்தில் பரவுவதை இதற்கு முன் பார்த்ததில்லை. தென் ஆப்ரிக்காவில் ஆல்பாவை விட பீட்டா, 30 சதவீதம் வேகமாக பரவியது; இதைவிட வேகமாக டெல்டா 70 சதவீதம் பரவியது. டெல்டாவை காட்டிலும் ஒமைக்ரான் 500 சதவீதம் வேகமாக பரவுகிறது.

இதற்கு முன் பரவிய வைரஸ் பாதிப்பின் போது, பல நாடுகள், நம் நாடு பாதிப்பை எப்படி கையாளுகிறது என்று பார்த்து, அதையே பின்பற்றின. தற்போது, தென் ஆப்ரிக்கா என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறது. கடந்த பல வாரங்களாக மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.

இதை எப்படி கையாளுவது என்று தெரிவதற்குள், ஒமைக்ரான் எல்லா நாட்டிற்கும் பரவி விடும். இது பரவும் வேகத்தைப் பார்த்தால், எந்த நாடும் மற்றொரு நாட்டுக்கு உதவி செய்ய முடியுமா என்பதே சந்தேகம் தான்.

தொற்று பரவல் வரும் வாரங்களில் நிச்சயம் அதிகமாகும். ஆனால், உள்நோயாளிகளாக இருந்து சிகிச்சை எவ்வளவு பேருக்கு தேவைப்படும், ஆக்சிஜன், வென்டிலேட்டர் தேவை அதிகம் இருக்குமா, உயிரிழப்பை ஏற்படுத்துமா என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் இல்லை. தற்போது நடைமுறையில் உள்ள தடுப்பூசிகள், தொற்றிலிருந்து பாதுகாப்பு தருகிறதோ, இல்லையோ, உயிர் பாதுகாப்பை நிச்சயம் தரும் என்பதை மட்டும் உறுதியாக சொல்ல முடியும்.

டாக்டர் சுப்ரமணியம் சுவாமிநாதன்,

தொற்று நோய் சிறப்பு மருத்துவர்,

குளோபல் ஹெல்த் சிட்டி, சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us