PUBLISHED ON : செப் 10, 2023

கர்ப்பப்பை வாய் கேன்சருக்கான தடுப்பூசியை 9 - 12 வயதிற்குள் போட வேண்டும் என்று சர்வதேச அளவில் நிர்ணயித்ததற்கான காரணம், பாலியல் உறவை ஆரம்பிப்பதற்கு முன் போட வேண்டும் என்பதால் தான்.
ஆனால், நம் சமூகத்தைப் பொருத்தவரை, அவ்வளவு சிறிய வயதில் தாம்பத்திய உறவு என்பதெல்லாம் நினைத்தே பார்க்க முடியாது; திருமணத்திற்கு பின் தான் பெரும்பாலும் அனுமதிக்கப்படுகிறது.
அதனால், திருமண வயதிற்கு முன் போடலாம். 'சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா' இந்த தடுப்பு மருந்தை உள்நாட்டிலேயே தயாரிக்கத் துவங்கியுள்ளது; குறைந்த விலையில் தருகிறது. 99 சதவீதம் கர்ப்பப்பை வாய் கேன்சரில் இருந்து பாதுகாப்பு தரும்.
'ஹியூமன் பேப்பிலோமா' எனப்படும் இந்த கேன்சரை உண்டாக்கும் வைரசில் இருந்தே மருந்து தயாரிக்கப்படுவதால், பக்க விளைவுகள் கிடையாது; தொற்றும் ஏற்படாது.
உடனடியாக எதிர்ப்பணுக்கள் உடம்பில் உருவாகும். பொதுவாக இரண்டு டோஸ் போட வேண்டிய தடுப்பு மருந்து வெளிநாட்டில் இருந்து வந்தது. சீரம் தயாரித்த தடுப்பு ஊசி ஒரு டோஸ் போட்டால் போதும்.
தமிழக அரசு பள்ளிகளில் கர்ப்பப்பை வாய் கேன்சர் தடுப்பூசி போடும் திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. சென்னை அடையாறு கேன்சர் மையத்தில் விரைவில் தடுப்பூசி போடுவது நடைமுறைக்கு வரும்.
அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட், சென்னை.rvijiciwia@gmail.com, r.vijayalakshmi@cancerimstitutewia.org
