தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/பத்மாசனம்

பத்மாசனம்

பத்மாசனம்


PUBLISHED ON : ஜூன் 24, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 24, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்த ஆசனம் மனதை ஒருநிலைப்படுத்த மிக சிறப்பான ஆசனம். மன உளைச்சலால் தவிக்கும் எல்லாருக்கும், மனதை தளர்த்திக் கொள்ள ஸ்திரத்தன்மை மிக அவசியமாகிறது. உடல் அசைந்து கொண்டிருக்கும் பொது, பிராணனும் அசைந்து கொண்டே இருக்கும். மனம் ஒருநிலையில் நிற்காமல் சலனப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

பத்மாசனம் செய்யும்போது, உடல் முழுமையான ஸ்திரத் தன்மை பெறுகிறது. மேலும் இரு கால்களும் பின்னி பிணைந்துள்ள இந்த பயிற்சியில், மூலாதாரத்திலிருந்து உயிர் சக்தி மேல் நோக்கி திருப்பி விடப்பட்டு, மூளையின் உயர்தளங்கள் விழிப்படைகின்றன. இதன் விளைவாக மூளையின் உயர்ந்த செயல்பாடுகள் வெளிப்படுகின்றன.

மேலும், இடகலை, பிங்கலை ஆகிய இரண்டு நாடிகளையும் சமநிலைக்கு கொண்டு வருவதால், உடல் மற்றும் மனம் இரண்டையும் சமப்படுத்த வல்ல ஓர் ஆசனம் இது.

இவ்வளவு உயர்ந்த ஆசனம் என்றாலும், போதுமான தயாரிப்புகள் செய்யாமல் இந்த பயிற்சியை செய்யக் கூடாது. கணுக்கால், முட்டி, இடுப்பு மூட்டுகளில் சிக்கல் உள்ளோர் இந்த பயிற்சியை செய்யக்கூடாது. யோகா பயிற்சிகளை, தேர்ச்சி பெற்ற ஆசிரியரிடம் நேரடியாக கற்றுக் கொண்டுதான் செய்ய வேண்டும்.

- சிவரிஷி,

சத்தியானந்த யோகா மைய நிறுவனர்,

சென்னை

98417 38069


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us