உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : செப் 08, 2013

அ நிறம் | அளவு
சி.ராமானுஜம், உத்தமபாளையம்: என் வயது, 52. சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு இல்லை. ஒரு வாரத்திற்கு முன், இடது கையிலும், இடது நெஞ்சிலும் வலி ஏற்பட்டது; பின் மறைந்து விட்டது. நான் டாக்டரிடம் செல்ல வேண்டுமா?
இடது கையிலும், நெஞ்சிலும் ஏற்படும் வலியை, ஒரு போதும் அலட்சியப்படுத்தக் கூடாது. இதய நோயின் அறிகுறிகள் பல இருந்தாலும், நடு நெஞ்சு, இடது நெஞ்சு, இடது கையில் வலியே பிரதானமாக கருதப்படுகிறது. உடனடியாக நீங்கள் டாக்டரிடம் சென்று, பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும்.
