தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/வலிக்கே கிலி வரும்!

வலிக்கே கிலி வரும்!

வலிக்கே கிலி வரும்!


PUBLISHED ON : ஏப் 09, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 09, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மூட்டு, முழங்கால், முழங்கை, கணுக்கால் இடுப்பு என, உடலின் முங்கிய பாகங்கள் வலிக்கும் போது, அதில் இருந்து நிவாரணம் பெற முடியாமல், நம்மை நாமே திட்டிக் கொள்வதுண்டு. இதற்கு, வலி மருந்துகள், மாத்திரைகள் சாப்பிட்டால், பல பக்கவிளைவுகள் ஏற்படும் என பயந்து கொண்டு, வலியை, பொறுத்துக் கொண்டு வாழ்ந்து வருவோர் பலர். இதற்கு, இயற்கையாக கிடைக்கும் உணவுகளை சாப்பிட்டு வந்தாலே பூரண குணம் பெறலாம்.

மூட்டு வலியால் அவதிப்படுவோர், முடக்கத்தான் கீரையை, தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும். ஆரம்பம் என்றால் உடனே குணம் கிடைக்கும். நாள்பட்ட வலி என்றால், கண்டிப்பாக, தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.

முடக்கத்தான் கீரையை, தினமும் சுத்தம் செய்து, காய வைத்து, மிக்சியில் அரைத்து சலித்து, வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடல் பலம் பெறும். முதுகு வலி இருந்தால், நல்லெண்ணெய்யை, வலி உள்ள இடத்தில் தேய்த்து வர, நிவாரணம் கிடைக்கும். யோகாவில், தனுராசனம், பலன் தரும். நல்லெண்ணெய்யை காய வைத்து, சூடேறியதும், இதில் 10 பல் பூண்டுகளைப் போட்டு, பூண்டுகள் சிவந்ததும் இறக்கி ஆற வைத்து, இந்த எண்ணெய்யை வலி உள்ள இடத்தில் தேய்த்து, மூன்று மணி நேரம் கழித்து, வெந்நீரில் குளிக்க வேண்டும்; தொடர்ந்து, 15 நாட்கள் மேற்கொண்டு வந்தால், முதுகு வலி குணமாகும்.

தலைவலி போகும்: தினமும் காலை, வெறும் வயிற்றில் இரண்டு அல்லது மூன்று பூண்டுகளை சாப்பிட்டு வந்தால், உடலுக்கு வரக்கூடிய பல உபாதைகளில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். எலுமிச்சை சாறில், சிறிது உப்பு போட்டு தினமும் குடித்து வந்தால், உடல் பலம் பெறும். மூட்டு வலிக்கு முட்டைக்கோஸ் சாறு அருந்தலாம். வலி ஏற்பட்டுள்ள மூட்டுக்களில், புதிய முட்டைக்கோஸ் இலைகளை அரைத்துப் பற்றுப் போடலாம்.

சாதாரண தலைவலி இருப்பவர்கள், நீரை கொதிக்க வைத்து, தலைவலிக்கான களிம்புகளை கலந்து ஆவி பிடித்தால், தலைவலி பறந்து விடும். ஒரு குவளை வெந்நீரில், அரை எலுமிச்சம்பழம் பிழிந்து, சிறிதளவு கல் உப்பு போட்டு குடித்தால், தலைவலி குணமாகும். காய்ச்சலுடன் தலைவலியும் இருந்தால், கடுகை அரைத்து உள்ளங்காலில் பற்றுப் போட்டால் தலைவலி, காய்ச்சல் நீங்கி விடும்.

பளிச் பார்வைக்கு! நீண்ட நாட்களாக ஒற்றைத்தலைவலி தொல்லை இருந்தால், தினமும் திராட்சை சாறு குடித்து வந்தால் பலன் கிடைக்கும். நொச்சி இலையை வதக்கி அதில் சிறிதளவு உப்பு தூவி, இளஞ்சூட்டில் நெற்றியில் பற்றுப் போட, நிவாரணம் கிடைக்கும். கீல் வாதம், முக வாதம் போன்ற கடுமையான வாத நோய்கள் மண்டைக் குடைச்சல் முதலியவற்றிற்கு செய்யப்படும் மருந்துகளில், கரு நொச்சி சேர்க்கப்படுகிறது.

காலில் வீக்கம் உள்ளவர்கள், தூதுவளை இலைகளையும், நற்சுங்கள் இலைகளையும் எடுத்து, சிறிது நீர் விட்டு அரைத்து, விழுதை, சுண்டக்காய் அளவில் மாத்திரை போல் செய்து, நிழலில் உலர்த்தி ஒரு பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். மூன்று மாத்திரைகளை, ஒரு குவளை பசும்பாலில் கரைத்து, இத்துடன் கற்கண்டு சேர்த்து, ஒரு வாரம் வரை, 2 வேளை குடித்து வந்தால், கால் வீக்கம் குணமாகும்.

தூதுவளையுடன், மிளகு சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால், வறட்டு இருமல் குறையும். தூதுவளை பழத்தை, வத்தலாக காயவைத்து, வதக்கி சாப்பிட்டால் கண் குறைபாடுகள் நீங்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us