PUBLISHED ON : ஜன 29, 2020

நீரிழிவு நோயில் எத்தனை வகைகள் உள்ளன?
டைப் 1, டைப் 2 என உள்ளன.டைப்- 1 குழந்தைகள், இளம் வயதினருக்கு வரும். இவர்கள் இன்சுலின் மருந்து எடுத்துக் கொள்வது சிறந்தது. டைப் 2 என்பது 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வேலைப்பளு, உடல்பருமன், கட்டுப்பாடில்லாத உணவு, வாழ்வியல்மாற்றம் ஆகியவற்றால் வருகிறது. இவர்களுக்கு மாத்திரை போதுமானது. டாக்டரின் ஆலோசனைப்படி இன்சுலின் எடுத்துக் கொள்ளலாம்.
கர்ப்பகால நீரிழிவு நோய் குறித்து?
கர்ப்பம் தரித்த பின் ரத்தத்தில்சர்க்கரை அளவு அதிகரிக்கும். குழந்தை பிறந்தவுடன் சர்க்கரை கட்டுப்பாட்டுக்குள் வரும். ஒரு சிலருக்கு இரண்டாம் வகை சர்க்கரையாகும் வாய்ப்பு உள்ளது. இவர்கள் கட்டாயம் இன்சுலின் எடுத்துக் கொள்வது சிறந்தது.
நாள்பட்ட நீரிழிவு நோயின் பின் விளைவுகள் என்ன?
இருதயம், இரத்த நாளங்கள்,கண்பார்வை, சிறுநீரகம், நாள்பட்ட ஆறாத புண்கள், நரம்புகள் மரத்துப் போதல் ஆகிய பாதிப்புகள் வரும்.n நீரிழிவு நோய் வரும் வாய்ப்புகள் யாருக்கு அதிகம்35 வயதுக்கு மேல், உடற்பயிற்சி இல்லாமல் அதிக உடல் எடை, கவலை, மன உளைச்சல், அதிகமாக 'டிவி' பார்ப்போர், அதிக கொழுப்பு, ரத்தஅழுத்தம், இருதய நோய் உள்ளவர்கள் பாதிக்க வாய்ப்புகள் அதிகம்.
நீரிழிவு பயம் இன்றி வாழ புதிய கண்டுபிடிப்புகள் உள்ளனவா?
இன்சுலினுக்கு அடுத்தபடியாக புதிய தொழில்நுட்பமாக இன்சுலின் பம்ப்' எனும் தானியங்கி சாதனம் புதிய வரவாக உள்ளது. சிறிய ஊசி மூலம் வலி இல்லாமல் உடலில் இன்சுலினை 'ஆண்ட்ராய்ட்' அலைபேசி அளவே உள்ள இக்கருவி மூலம் செலுத்தலாம். இக்கருவி செயற்கை கணையத்தை போல் செயல்படும்.
'இன்சுலின் பம்ப்'பி-ன் பயன்கள் யாவை?
ஒரே நாளில் பலமுறை இன்சுலின் ஊசி ஏற்ற தேவையில்லை. 'பம்ப்'பில் உள்ள பட்டனை அழுத்தி உடலுக்குள் இன்சுலினை செலுத்தலாம். பம்ப் பொருத்தியவர்கள் பயமின்றி வாழலாம். அடிக்கடி 'லோ குளுக்கோஸ்' வருவது குறையும்.மற்ற உறுப்புகள் பாதிக்கப்படுவது தடுக்கப்படும். இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம்.
ரத்த பரிசோதனையின்றி சர்க்கரை அளவை பரிசோதிக்கலாமா?
சி.ஜி.எம்., (Continuous Glucose Monitor) சாதனம் உள்ளது. ரத்தமின்றி சர்க்கரை அளவை கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம் தான் இந்த சாதனம். நாள் ஒன்றுக்கு நுாறு முறை சர்க்கரை அளவை சோதிக்கும் சாதனம். இதனை உடலில் பொருத்துவது மிகவும் சுலபம். 14 நாட்கள் வைத்திருக்கலாம்.
டாக்டர் எம். தெய்வேந்திரன்
நீரிழிவு நோய் நிபுணர்
வத்தலக்குண்டு
96889 81567
