தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/சர்க்கரை நோய்க்கு சரியான தீர்வு!

சர்க்கரை நோய்க்கு சரியான தீர்வு!

சர்க்கரை நோய்க்கு சரியான தீர்வு!


PUBLISHED ON : மார் 01, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 01, 2015


Follow on Google
அ நிறம் | அளவு

சர்க்கரை நோயை பிரதானமாக கட்டுப்படுத்தக் கூடிய தன்மை வெந்தயத்திற்கு உண்டு. இரும்பை பஸ்பமாக்கக்கூடிய ஒரு பொருள் எது என்றால், அது வெந்தயம் தான். வெந்தயத்தை வறுத்து வைத்துக் கொண்டு, தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே வந்தால், நீரிழிவு நோய் முழுமையாகக் கட்டுப்படுத்தலாம். ரத்தத்தில் கெட்ட கொழுப்பு காரணமாக, இதய அடைப்பு ஏற்படாமல் தடுக்க, நம் நாட்டு கருவேப்பிலை, லவங்கப் பட்டை, வெந்தயம் இந்த மூன்றையும், சம அளவில் கலந்து வைத்துக் கொண்டு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கண்டிப்பாக அற்புதமான பலன் கிடைக்கும்.

பாகற்காய்: அடுத்து பாகற்காய். பாகற்காயை நன்கு காயவைத்துப் பொடி செய்து காலை, இரவு என்று இரண்டு வேளை, தொடர்ந்து சாப்பிடக் கூடியவர்களுக்கு, கண்டிப்பாகச் சர்க்கரை நோய் முழுமையாகக் குறையும்.

சர்க்கரை நோய் என்பது தனி நோய் கிடையாது. இது பல நோய்களுடைய சார்பு நோய் ஆகும். ஆதலால் நீரிழிவை நாம் உண்ணும் உணவின் மூலம் கட்டுப்படுத்த வேண்டும். நீரிழிவு நம் உடம்பை மென்மையாக்குகிறது. அப்பொழுது நன்றாக உண்ணக்கூடிய உணவுப் பொருட்களைச் சாப்பிட வேண்டும். நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், எந்த உணவுப் பொருட்களில் துவர்ப்பு அதிகமாக இருக்கிறதோ அவைகள் நீரிழிவை கட்டுப்படுத்தும்.

வாழைப்பூ: வாழைப்பூவை கசாயம் செய்து சாப்பிட, நீரிழிவு கட்டுப்படும். ஆனால் வாழைப்பூவில் கடலைப்பருப்பைச் சேர்த்து இன்று நாம் பருப்பு வடையாகத்தான் சாப்பிடுகிறோம். இதே வாழைப்பூவுடன், சிறிது காய்ந்த மிளகாய் எல்லாம் சேர்த்து அரைத்து துவையல் மாதிரி செய்து தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது சர்க்கரை நோய் கட்டுப்படும்.

தென்னைமரப் பூ: அதே மாதிரி தென்னம்பாலைக்குள் இருக்கும் தென்னை மரத்துப் பூவை நன்றாகக் காயவைத்து, அதைப் பொடி செய்து காலையிலும், இரவிலும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சர்க்கரை நோய் கட்டுப்படுவதுடன், சர்க்கரை நோயால் தளர்ந்து போன நரம்புகள் அனைத்தும் சரியாகிவிடும். இதனால் நம் கண் பார்வையும் தெளிவாக இருக்கும்.

நீரிழிவால் நரம்பு பாதிக்கப்படுவதால், கண்ணில் வரக்கூடிய நோய்கள் நிறைய வரும். அதே போல், நம் பாதங்களிலும் பல நோய் வரும். இவை அனைத்தையும் சரி செய்யக் கூடிய தன்மை, தென்னைமரத்துப் பூவுக்கு உண்டு.

நெல்லி, கடுக்காய், தான்றிக்காய்: அது போல் நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் இதையும் சம அளவில் கலந்து, திரிபலா சூரணத்தையும் சாப்பிடும் பொழுது, நீரிழிவு முழுமையாகக் கட்டுப்படக்கூடிய ஒரு வாய்ப்பு உண்டு. அதே போல் இந்த சர்க்கரை நோய்க்கு என்ன செய்யலாம் என்றால், சமையலில் சீரகத்திற்குப் பதிலாக அல்லது சீரகத்துடன் கருஞ்சீரகத்தையும் சேர்த்து சமையலில் ஈடுபடுத்தும் பொழுது சர்க்கரைக்கு அற்புதமான ஒரு மருந்தாக இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us