PUBLISHED ON : மார் 04, 2015

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இன்று, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முதல், அரசியல் கட்சிகள் வரை, அனைவரின் கவனத்தை ஈர்க்கும் ஒரே தானம், ரத்த தானம் மட்டுமே. ஆனால் அனைவரும் நினைத்த நேரத்தில், ரத்த தானம் கொடுத்து விட முடியுமா?
நல்ல உடல் நலம் உள்ள ஆண், பெண்; 18 வயதுக்கு மேல் 60 வயதுக்கு கீழ் இருப்போர்; குறைந்தது 45 கிலோ எடை இருப்போர், ஆகியோர் ரத்த தானம் அளிக்கலாம்யார் யார் ரத்த தானம் கொடுக்க முடியாது?
ரத்த தானம் கொடுப்பவரின் ஹீமோகுளோபின் அளவு, 12.5 கிராமுக்கு மேலும், இயல்பான ரத்த அழுத்தமும் இருக்க வேண்டும்
ஆண்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறையும், பெண்கள் நான்கு மாதங்களுக்கு ஒருமுறையும், ரத்த தானம் செய்யலாம்
குழந்தை பிறந்து, ஆறு மாதம் கழித்து பெண்கள் ரத்த தானம் கொடுக்கலாம்
கருக்கலைப்பு செய்தோர், ஆறு மாதங்களுக்கு பின், அளிக்கலாம்
பெரிய அளவிலான அறுவை சிகிச்சை செய்தவர்கள்
ஆறு மாதங்கள் கழித்து, ரத்த தானம் செய்யலாம்
பி.பி., உள்ளோர், ரத்த அழுத்தம் சரியாக இருக்கும் நேரத்தில் கொடுக்கலாம்
தடுப்பூசி போட்டுக் கொண்டோர், நான்கு வாரங்களுக்கு பின், கொடுக்கலாம்
நாய்க்கடி, மஞ்சள் காமாலைக்கு சிகிச்சை பெற்றோர், ௧௨ மாதங்களுக்கு பின், கொடுக்கலாம்
நோய் எதிர்ப்பு மாத்திரை (ஆன்டிபயாடிக்) சாப்பிடுவோர், 5 நாட்களுக்கு பின்பே, கொடுக்க முடியும்.
ரத்ததானம் செய்ய 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும்; பின், ௨௦ நிமிடங்கள் ஓய்வெடுக்க வேண்டும்.
ஆஸ்துமாவிற்காக 'கார்டிஸோன்' மருந்து சாப்பிடுவோர்ரத்த தானத்திற்கு பின் என்ன செய்ய வேண்டும்?
இதய நோய், வலிப்பு, ரத்தம் உறையாமை ஆகிய நோய்கள் உள்ளோர்
காசநோய் உள்ளோர்
இன்சுலின் செலுத்தி கொள்வோர்
திரவ உணவு அருந்த வேண்டும்
ஒரு மணிநேரத்திற்கு புகை பிடிக்க கூடாது
6 மணி நேரத்திற்கு மது அருந்த கூடாது
- மா.வெங்கடேசன்,
குழந்தைகள் நல மருத்துவர்.

