தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/மாத்திரைகளை அரைகுறையாக சாப்பிடக் கூடாது

மாத்திரைகளை அரைகுறையாக சாப்பிடக் கூடாது

மாத்திரைகளை அரைகுறையாக சாப்பிடக் கூடாது


PUBLISHED ON : நவ 28, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 28, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செயல் இழந்த கணையத்தை மேலும் செயல் இழக்க செய்யும் சர்க்கரை மாத்திரைகள், சி.டி.எப்., மையத்தில் முதல் முறை சர்க்கரை சிகிச்சை பெறுபவர்களில் 40 சதவீதம் நபர்களுக்கு பிரச்னை சர்க்கரையால் அல்ல... சர்க்கரை மாத்திரைகளால் தான். இதில் அதிக டோஸ் மாத்திரை, பொருத்தமற்ற மாத்திரை, பின் விளைவுகள் கொண்ட மாத்திரை, மருத்துவ ஆலோசனை இன்றி ஒரே மாத்திரையை சாப்பிடுவது. மேலும் யாருக்கு எந்த மாத்திரை என ஆரம்பத்தில் சொல்ல முடியாது. சர்க்கரை உள்ளவர்களுக்கு இரண்டு குறைபாடுகள், இன்சுலின் குறைபாடு, இன்சுலின் எதிர்ப்புத்தன்மை (அ) வேலை செய்யாமை. இதில் ஒருவருக்கு சர்க்கரை நோய் கண்டுபிடிக்கப்படும் போது, 50 சதவீதம் குறைந்து விடுகிறது. வருடந்தோறும் 5 சதவீதம் என குறைந்து, பல ஆண்டுகளில் 90 சதவீதம் இன்சுலின் தீர்ந்திருக்கும். மீதம் 10 சதவீதம் உள்ளவர்களுக்கு இன்சுலின் தான் சிகிச்சை. சிலருக்கு கணையத்தை குறைவாக தூண்டும் மாத்திரைகளை பரிந்துரை செய்வது நல்லது. அடுத்ததாக இன்சுலின் உடலில் சுரக்கிறது. ஆனால் சில இன்சுலின் வேலை செய்வ தில்லை. இதனால் சர்க்கரை குறைவ தில்லை. இது இன்சுலின் எதிர்ப்புத் தன்மை எனப்படுகிறது. சர்க்கரை மாத்திரையில் இரண்டு வகை கணையத்தை தூண்டுவது, வேலை செய்ய வைப்பது என்பன, இதில் நாட்டில் 80 சதவீதம் தூண்டவும் மாத்திரைகள் பயன்படுத்தப்படுகிறது. இது குறைந்த இன்சுலினை விரைவாக குறைத்து விடுகிறது. மேலும் சில ஆண்டுகளில் மாத்திரை வேலை செய்யாமல் போகலாம். உடற்பயிற்சி இல்லாமல் எந்த மாத்திரை சாப்பிட்டாலும், சர்க்கரை கட்டுப்பாட்டில் வராது. இட்லி, தோசை, சாதம் ஆகியன இன்சுலினை குறைத்து விடும். உடற்பயிற்சி இல்லா விட்டால் இன்சுலின் எதிர்ப்புத்தன்மை ஏற்படும்.

மாத்திரைகளை அரைகுறையாகவும், மாற்றி மாற்றியும் சாப்பிடுவது பின்விளைவுகளை ஏற்படுத்தும். அடிக்கடி மருத்துவரைக் கண்டு சர்க்கரை அளவிற்கேற்ப மருந்தை மாற்ற வேண்டும். பலருக்கு சர்க்கரை குறைந்தாலும் எடை கூடும். ரோஸி கிளிசோன், பயோ கிடைசோன் ஆகிய மாத்திரைகள் சர்க்கரையை குறைத்தாலும் எடையை கூட்டுவன.

சர்க்கரையை குறைத்து, வாழ்க்கை தரத்தை உயர்த்த சர்க்கரை நோய் உள்ளவர்கள், கணையத்தை தூண்டாத மாத்திரைகள், குறைந்த வீரியம் உடைய மாத்திரைகள், தூண்டும் மாத்திரையை ஏற்கனவே சாப்பிட்டால் மருத்துவ ஆலோசனை பெறுதல், கலவை மாத்திரைகள் கூடாது, இன்சுலின் சிகிச்சை அவசியம், ஒரு முறை இன்சுலின் போட்டால் வாழ்நாள் முழுவதும் போட வேண்டும், இன்சுலின் குறைந்தால் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வது நல்லது. எடை கூடுதல், குறைதல், கால் எரிச்சல், அடிக்கடி தாழ்நிலை சர்க்கரை, அதிக பசி, கால் வீக்கம், சோர்வு, அசதி ஆகியன பொருத்தமற்ற மாத்திரையின் அறிகுறிகள். முழுமையான உடல் பரிசோதனை, சர்க்கரை முகாம்களில் கலந்து கொள்ளுதல் மூலமாக பொருத்தமான மாத்திரையை அறியலாம்.

- டாக்டர் சேகர், கோயமுத்தூர் டயபடிஸ் பவுண்டேஷன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us