தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/மாரடைப்புக்கு பின் வாழ்க்கை முறை

மாரடைப்புக்கு பின் வாழ்க்கை முறை

மாரடைப்புக்கு பின் வாழ்க்கை முறை


PUBLISHED ON : நவ 28, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 28, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நம்மில் பலருக்கு மாரடைப்பு வந்தபின், 'இயல்பான, கடுமையான உழைப்புடன் கூடிய முழுமையான வாழ்க்கை வாழ்வது கடினம்; இனிமேல் ஒருவித ஓய்வு பெற்ற வாழ்க்கை முறை தான்' என்ற எண்ணமே மேலோங்கி இருக்கிறது. இது முற்றிலும் உண்மை அல்ல. மாரடைப்பு வந்தவுடன் காலம் கடத்தாமல் விரைவாக, முறையாக சிகிச்சை பெற்றோருக்கு பாதிக்கப்படும் இதய தசையின் அளவை மிகவும் குறைக்கலாம். இதனால் இதய தசையின் பெரும்பகுதி வலுவிழக்காமலும், செயலிழக்காமலும் காப்பாற்றப்படுகிறது.

இதை மீண்டும் வலியுறுத்தி சொல்ல காரணம், மாரடைப்பிற்கு பின் உள்ள இதய தசையின் வலிமையே, பிற்கால வாழ்க்கை முறையை வகுப்பதில் மிகமுக்கிய பங்கு வகிக்கிறது.

மாரடைப்பிற்கான தற்போதைய நவீன மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை முறையால் பெரும்பாலா னோருக்கு இதய தசை அவ்வளவாக வலுவிழப்பதில்லை. எனவே அவர்கள் மாரடைப்புக்கு பின்னும் முறையான மருத்துவ ஆலோசனையின் உதவியுடன் இயல்பான பலனுள்ள வாழ்க்கையை வாழலாம்.

* மாரடைப்புக்கு பின் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவது எப்படி?

மாரடைப்புக்குப் பின் பெரும்பாலானோர் ஐந்து அல்லது ஏழு நாட்களுக்குள் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவர். மருத்துவமனையில் பெற்ற சிகிச்சையோடு மாரடைப்புக்கான சிகிச்சை முற்றுப் பெற்றது என்று எண்ணுவது சரியல்ல. அது சிகிச்சையின் ஆரம்பமே. ஒரு முறை மாரடைப்பு நேர்ந்துவிட்டால் வாழ்நாள் முழுமைக்குமான தொடர் சிகிச்சைக்கு தன்னை தயார் செய்து கொள்ள வேண்டும். இத்தொடர் சிகிச்சையின் மூலமே இயல்பான வாழ்வுக்கு திரும்புவதுடன், மற்றுமொரு மாரடைப்பு நேராமல் தவிர்க்கலாம்.

உடற்பயிற்சியும், சரியான அளவு ஓய்வும்: மாரடைப்புக்கு பின் இதய வலியோ அல்லது வேறு பிரச்னைகளோ இல்லாதபட்சத்தில், ஒரு வாரத்தில் எளிதான உடற்பயிற்சியை தொடங்கலாம். எத்தகைய உடற்பயிற்சி செய்தல் வேண்டும் என்பதற்கு, மாரடைப்பின் தன்மையை பொறுத்து டாக்டர் ஆலோசனை தருவர். பெரும்பாலானோருக்கு நடைப் பயிற்சியே எளிதான உடற்பயிற்சியாக இருக்கும். இத்தகைய உடற்பயிற்சியை கொஞ்சம், கொஞ்சமாக அதிகப்படுத்தி, ஒரு சீரான நிலையை அடைவது முக்கியம்.

துவக்கத்தில் காலை, மாலை 10 நிமிடம் நடக்கலாம். பின் நேரத்தையும், வேகத்தையும் இருவாரங்களில் கொஞ்சம், கொஞ்சமாக அதிகரித்து 30 நிமிடங்கள் ஆக்கலாம். துவக்கத்தில் ஐந்து கிலோ எடைக்கு மேலுள்ள பொருளை தூக்காமல் இருப்பது நல்லது. ஆனால் சின்னச்சின்ன வேலைகளை தாராளமாக செய்யலாம்.

இதய வலியோ, மூச்சுத் திணறலோ இல்லாதபோது, ஆறு வாரங்களுக்குள் வேலைக்கு செல்வது, இயல்பான வாழ்வு நிலைக்கு திரும்புவது பெரும்பாலானோருக்கு சாத்தியமே. வேலைக்கு திரும்பும் முன் டாக்டரை சந்தித்து, ஆலோசனை பெறுவது அவசியம். உடற்பயிற்சியோ, சிறு வேலைகளோ செய்யும் போது, களைப்பாக இருந்தால் சிறிது ஓய்வு எடுப்பது அவசியம். இரவு நேரத்தில் கண்டிப்பாக ஆறு முதல் எட்டு மணி நேரம் ஆழ்ந்த உறக்கம் தேவை. பகல் வேளையில் களைப்பு இருந்தால், 30 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை தூங்கலாம்.

மற்ற உடல் தசையை போன்றது தான் இதயமும். சீரான உடற்பயிற்சி எவ்வாறு மற்ற உடல் தசைகளை பலமாக்குகிறதோ, அதேபோல தான் இதய தசையையும் வலிமை பெறச் செய்கிறது.

மாரடைப்பும், தாம்பத்யமும்: எந்தச் சிக்கலும் இன்றி மாரடைப்பில் இருந்து குணமாகி வரும் போது, நான்கில் இருந்து ஆறு வாரங்களில் இயல்பான தாம்பத்ய வாழ்வில் ஈடுபடலாம். அதுபற்றி டாக்டரிடம் கலந்து ஆலோசிப்பது நல்லது.

மாரடைப்பும், மனச்சோர்வும்: மாரடைப்பால் சிறிது மனச்சோர்வு ஏற்படுவது இயற்கை. பெரும்பாலோர் இதிலிருந்து, ஒன்று முதல் மூன்று மாதங்களில் விடுபட்டு, இயல்பு வாழ்வுக்கு திரும்புவர். அவ்வாறு மனச்சோர்வில் இருந்து விடுபட சீரான, தினசரி, தவறாத உடற்பயிற்சி மற்றும் மற்ற வேலைகளில் கவனம் செலுத்தி, மனதை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளுதல் பேருதவியாக இருக்கிறது. சிலருக்கு சோர்வில் இருந்து விடுபடுவது கடினமாக இருக்கிறது. சிலருக்கு, தாம் மனச்சோர்வால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பதை அறிவதே கடினமாக இருக்கிறது. இவர்களை டாக்டரிடம் அழைத்து சென்று, சரியான ஆலோசனை மற்றும் மருந்துகள் வழங்குவதன் மூலம், 90 சதவீதம் பேர் குணமடைகின்றனர். முறையாக சிகிச்சை பெறாதவரின் இதய நலம் வெகுவாக பாதிக்கப்படுகிறது என்பது ஆராய்ச்சிகளின் முடிவு.

- டாக்டர் எஸ்.கே.பி.கருப்பையா, மதுரை.

* * வி.கணேசன், மதுரை: எனக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் மாரடைப்பு வந்தது. ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்ததில், இரு இடங்களில் 50 சதவீத அடைப்பு உள்ளதென வந்தது. இதற்கு டாக்டர் மருந்து மாத்திரைகள் போதும் என்றார். இதனால் அடைப்பு குறையுமா?

மாரடைப்பு சிகிச்சை, இதய நோய் சிகிச்சை தற்போது தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்துள்ளன என்பது அசைக்க முடியாத உண்மை. எந்தளவு பலூன், பை-பாஸ் சிகிச்சை தொழில்நுட்ப ரீதியில் வளர்ந்துள்ளதோ, அதேஅளவு மருந்து மாத்திரை சிகிச்சையும் வளர்ந்துள்ளது. இதய ரத்தநாளங்களில் ஏற்படும் அனைத்து அடைப்புக்கும் பை-பாஸ் அறுவை சிகிச்சை அல்லது பலூன் சிகிச்சையோ தேவைப்படும் என்பது மிகத்தவறான கருத்து. தற்போதுள்ள மருந்து மாத்திரைகளால், அடைப்பு கூடாமல் பார்த்து கொள்வதுடன், இருக்கும் அடைப்பை குறைக்கும் அளவுக்கும் மாத்திரைகள் வந்துள்ளன. அதுமட்டுமின்றி, அடைப்பே வராமல் இருக்கவும் மருந்துகள் உள்ளன. இருந்தாலும் உங்களுக்கு அடைப்பு இருப்பதால், உங்கள் இதய டாக்டரிடம் குறிப்பிட்ட கால இடைவெளியில் சென்று, தேவையான பரிசோதனைகளை, குறிப்பாக டிரெட் மில் பரிசோதனை அல்லது கூடச்டூடூடிதட் போன்ற பரிசோதனையை செய்து கொள்வது அவசியம்.

* கே.குமார், திண்டிவனம்: எனக்கு 15 ஆண்டுகளாக இதயத்தில் வால்வு சுருக்கம் இருந்தது. தற்போது நான்கு மாதங்களுக்கு முன் வால்வு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். மீண்டும் எனக்கு மூட்டுக்கு மூட்டு வலி, வீக்கம் ஏற்படுகிறது. இதனால் மீண்டும் வால்வில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதா?

இதயத்தின் வால்வுகளில் கோளாறுகள் கீடதட்ச்tடிஞி ஊஞுதிஞுணூ என்ற வியாதியால் ஏற்படுகிறது. இதில் மூட்டுகளில் வலி இருந்தாலும், பாதிப்பு இதயத்திற்கு தான். வால்வு மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகும் நீங்கள், கீடதட்ச்tடிஞி ஊஞுதிஞுணூக்கான கஞுணடிஞீதணூஞு என்ற ஊசியை மூன்று வாரத்திற்கு ஒருமுறை தவறாமல் எடுத்தாக வேண்டும்.

இதை 45 வயது வரையோ அல்லது டாக்டரின் ஆலோசனைப்படி பல ஆண்டுகளுக்கோ அவசியம் எடுத்தாக வேண்டும். வால்வு அறுவை சிகிச்சைக்கு பிறகு, கஞுணடிஞீதணூஞு ஊசியை நிறுத்துவது தவறான கருத்து.

* வி.கந்தவேலன், ராமநாதபுரம்: கொலஸ்ட்ரால் அளவு நார்மலாக உள்ளவர்கள் குtச்tடிண வகை மாத்திரையை எடுத்துக் கொள்ளலாமா?

ஸ்டேட்டின் வகை மாத்திரை என்பது ரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து, ஓரளவு நல்ல கொழுப்பின் அளவை கூட்டும் மருந்து. இது இதயம் மட்டுமின்றி, ரத்தக்குழாய் நோய்களுக்கும் நல்ல மருந்து. மாரடைப்பு, பக்கவாதம் போன்ற கொடூர நோய்கள் வராமல் தடுக்கிறது. சர்க்கரை, ரத்தக்கொதிப்பு நோயாளிகள், பக்கவாதம், சிறுநீரக கோளாறுகள், ரத்த நாளங்களில் அடைப்பு உள்ளவர்கள் இந்த மாத்திரையை எடுப்பது மிகவும் அவசியம்.

இது போன்ற வியாதி உள்ளவர்களுக்கு ரத்தத்தில் கொழுப்பின் அளவு நார்மலாக இருந்தாலும் இதை எடுப்பது நல்லதே. ஏனெனில் இது ரத்தக் கொழுப்பை குறைத்து, ரத்தநாளத்திற்கு பல வகைகளில் பலனளிக்கிறது. இருந்தாலும் எந்த வியாதியும் இல்லாத ஒருவர், ரத்தத்தில் கொழுப்பின் அளவு நார்மலாக இருந்தால் இந்த மாத்திரையை எடுக்க தேவையில்லை.

     

* ஆர்.ராமசாமி, சிவகங்கை: இதய நோயாளிகள் மொபைல் போன் பயன்படுத்தலாமா?

இதய நோயாளிகள் மொபைல் போனை தாராளமாக பயன்படுத்தலாம். மொபைல் போனில் பேசும் போது பதற்றம் இன்றி பேசுவது முக்கியம். 'பேஸ்மேக்கர்' பொருத்தியவர்கள் மொபைல் போனை சட்டைப் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளக் கூடாது. பேஸ்மேக்கர் கருவி, பேசு பவரின் இடது மார்பில் பொருத்தியிருந்தால், வலது காதில் போனை வைத்து பேச வேண்டும். பேஸ்மேக்கர் கருவி வலது மார்பில் பொருத்தியிருந்தால், போனை இடது காதில் வைத்து பேசுவது நல்லது.

- டாக்டர் சி.விவேக்போஸ், மதுரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us