PUBLISHED ON : ஜன 24, 2021

கடந்த நவம்பர் மாதம், ராமச்சந்திரா மருத்துவ மையத்தில் தடுப்பு ஊசிக்கான, 'டிரையல்' நடந்த போதே, சுய விருப்பமாக பெயரை பதிவு செய்து, போட்டுக் கொண்டேன். மூன்று வார இடைவெளியில் இரண்டு, 'டோஸ்' போட்டு விட்டேன்.
பாதுகாப்பு என்று சொன்னால் மட்டும் போதாது. மருத்துவர்கள் முன் உதாரணமாக இருந்தால் தானே, மக்களுக்கு நம்பிக்கை வரும்; அதனால் தான், நான் போட்டுக் கொண்டேன். பரிசோதனை செய்ததில், என்னுடைய நோய் எதிர்ப்பு அணுக்கள் நன்கு அதிகரித்து உள்ளன.
தடுப்பூசி போட்டதும், முதல் நாள் காய்ச்சல் வரலாம்; 'பாரசிட்டமால்' மாத்திரை போட்டுக் கொள்ள சொன்னார்கள்; எனக்கு அந்த அவசியம் கூட ஏற்படவில்லை.
இரண்டாவது டோஸ் போட்ட போது, கையில் வலி இருந்தது. எந்த ஊசி போட்டாலும், லேசாக வலி இருக்கவே செய்யும். நான், 'கோவிஷீல்டு' போட்டுக் கொண்டேன். வைரசால் மரபணு மாற்றம் நிகழ்ந்தாலும், அதில் உள்ள புரதச் சுவரை அழிக்கும் விதமாகவே தடுப்பூசி செயல்படும்; எனவே, உருமாற்றம் ஆனாலும், பாதிப்பு நமக்கு இருக்காது.
தினமும் நோயாளிகளை சந்திக்க வேண்டிய சூழலில், தடுப்பூசி போட்ட பின், கடந்த இரண்டு மாதங்களில், தயக்கம் இல்லாமல் வேலை செய்ய முடிகிறது. உருமாற்றம் பெற்ற வைரஸ், முந்தையதை விட, அதிக வேகத்தில் தொடருகிறது: ஆனால், வீரியம் அதிகம் இல்லை என்று தான் சொல்லப்படுகிறது. எதுவானாலும் தடுப்பூசி போடுவது நல்லது.
டாக்டர் முகமது ரேலா
தலைவர், ரேலா மருத்துவமனை.
98840 00104, 044 - 6666 7777
