PUBLISHED ON : ஜன 13, 2013

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாமி, தேனி: என் மகள், ஆஸ்துமாவுக்காக, 'இன்ஹேலர்' பயன்படுத்துகிறார். திருமணமாக உள்ள அவர், தொடர்ந்து பயன்படுத்தினால், கர்ப்ப கால பிரச்னை ஏற்படுமா?
கருவுற்ற ஒரு பெண்ணுக்கு, மூச்சுத் திணறல் ஏற்பட்டால் குழந்தைகளுக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு குறைகிறது. இதனால் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படலாம். எடை குறைவான, குறைமாத குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது. எனவே, கருவுற்ற பெண்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது மிகஅவசியம். அதற்கு இன்ஹேலர் பயன்படுத்துவது நல்லது.