sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

மீண்டும் மாரடைப்பு வருவதை தடுக்கலாமா?

/

மீண்டும் மாரடைப்பு வருவதை தடுக்கலாமா?

மீண்டும் மாரடைப்பு வருவதை தடுக்கலாமா?

மீண்டும் மாரடைப்பு வருவதை தடுக்கலாமா?


PUBLISHED ON : ஆக 19, 2012

Google News

PUBLISHED ON : ஆக 19, 2012


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* க. சரவணன், தேனி: எனக்கு, 2 ஆண்டுகளுக்கு முன், மாரடைப்பு ஏற்பட்டது. தற்போது எந்த தொந்தரவும் இல்லை. சர்க்கரை நோய், ரத்தஅழுத்தம் கட்டுப்பாட்டில் உள்ளது. ரத்தத்தில், LDL என்ற அளவு, 120 மி.கி. என்ற அளவிலேயே உள்ளது. இதற்காக நான் தொடர்ந்து, ATORVASTATIN, 10 மி.கி., என்ற மருந்தை எடுத்து வருகிறேன். இது சரியான அளவுதானா?

ரத்தத்தில் இருக்கும் கெட்ட கொழுப்பை தான், LDL என குறிப்பிடுகிறோம். மாரடைப்பு, பக்கவாதத்தை தடுக்க, LDL அளவு, 100 மி.கி.,க்கு கீழ் இருக்க வேண்டும். ஆனால், ஒருமுறை மாரடைப்பு ஏற்பட்டு விட்டால், இந்த கெட்ட கொழுப்பின் அளவு அவசியம், 70 மி.கி.,க்கு கீழ் இருக்க வேண்டும். அப்போது தான் மீண்டும் மாரடைப்பு ஏற்படுவதை தடுக்க முடியும்.

உங்களது, 120 மி.கி., அளவு மிகவும் அதிகமானது. இதற்கு நீங்கள் எடுத்துக் கொண்டிருக்கும், ATORVASTATIN மருந்தின் அளவை அதிகப்படுத்திக் கொள்ளலாம் அல்லது ROSUVASTATIN என்ற மாத்திரையை எடுத்துக் கொள்ளலாம்.

* பி. சந்திரா, ராமநாதபுரம்: எனக்கு ஓராண்டாக சர்க்கரை நோய் உள்ளது. இதற்காக நான் GLIMEPRIDE, 1 மி.கி., என்ற மருந்தையும், PIO, 15 மி.கி., என்ற மாத்திரையையும் எடுத்து வருகிறேன். ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் உள்ளது. தினமும் வாக்கிங், உணவுக் கட்டுப்பாடு உண்டு. இருந்தும் எனது உடல் எடை கூடுகிறது. நான் என்ன செய்ய வேண்டும்?

சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்திருக்க, வாக்கிங், உணவுப் பழக்கம் அவசியம். இதனுடன் மருந்தையும் சரியாக எடுத்துக் கொண்டால் சர்க்கரை நோயை பற்றி, அஞ்ச தேவையில்லை. உடல் எடை அதிகரிக்க காரணம், நீங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் PIO GLITAZONE என்ற மருந்துதான் காரணம். உங்கள் டாக்டரிடம் ஆலோசித்து, வேறு மருந்தை எடுத்துக் கொண்டால் எடை குறையும்.

டாக்டர் விவேக்போஸ், மதுரை.






      Dinamalar
      Follow us