sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/கேள்வி - பதில்

கேள்வி - பதில்

கேள்வி - பதில்


PUBLISHED ON : ஜூன் 03, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 03, 2015


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

 எனக்கு வயது 51. எனக்கு 'ருமட்டாய்டு ஆர்த்ரைடிஸ்' இருப்பதாக, மருத்துவர் சொல்கிறார். அது, என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும்?

முத்துப்பாண்டி, பாண்டிச்சேரி

நமது நோய் எதிர்ப்பு செல்கள், மூட்டினை தாக்குவதால் ஏற்படும் பாதிப்பை, 'ருமட்டாய்டு ஆர்த்ரைடிஸ்' என்கிறோம். உடலில் மூட்டுகள் எங்கெல்லாம் இணைகின்றனவோ, அங்கெல்லாம் பிரச்னை இருக்கும். சில நேரங்களில் வீக்கம் ஏற்படும். அடிக்கடி காய்ச்சல் வரும். எடை குறையும். இரவு துாங்கி எழுந்த பின், காலை நேரங்களில் படுக்கையை விட்டு எழுந்திருக்கவே முடியாத நிலை இருக்கும். படுக்கவும் சிரமமாக இருக்கும்.

இந்த வகை மூட்டு வலிக்கு, துளை போட்டு செய்யப்படும் அறுவை சிகிச்சை அல்லது மூட்டு மாற்று அறுவை சிகிச்சை தான் பலன் அளிக்கும். மூட்டு வலி வருவதற்கு, உடற்பயிற்சி இன்மை தான் காரணம்.

கனகசுந்தரம், எலும்பு நிபுணர்.

 'கவுட்' நோய் என்றால் என்ன? ஹோமியோபதி மருத்துவர், எனக்கு இந்த நோய் இருப்பதாக சொல்கிறார். விளக்கம் ப்ளீஸ்?

பரானா, மீஞ்சூர், சென்னை.

சர்க்கரை நோய் இல்லாத சிலருக்கு, காலில் வீக்கம், எரிச்சல், நடக்க முடியாத நிலை ஏற்படும். காலில் நீர் கோர்த்துக் கொண்டிருக்கும். பயங்கரமாக ஊசி வைத்து குத்துவது போல் இருக்கும். பெருவிரல் வீக்கம், நீர்கோர்த்து வலியுடன் கூடிய எரிச்சல் உணர்வும் இருக்கும்.

இதுபோன்ற அறிகுறிகள் தான், 'கவுட்' நோயின் அறிகுறி. அது ஒரு வகையான மூட்டு வாதம். ரத்தத்தில், யூரிக் அமில அளவு அதிகரிக்கும் போது, 'கவுட்' ஏற்படும். சராசரியாக, ஒரு மனிதனுக்கு, 7 கிராம் அளவுக்கு, யூரிக் அமிலம், உடலில் இருப்பது இயல்பு நிலை. இதற்கு மேல் சென்றால், 'கவுட்' பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிலருக்கு, உடலில் எங்கு வேண்டுமானாலும், 'கவுட்' வரலாம். பெண்களை விட ஆண்களையே அதிகம் தாக்கும். தாங்க முடியாத அளவு வலி இருக்கும். 40 வயதை நெருங்குவோருக்கு, 'கவுட்' பிரச்னை வருகிறது. இந்த நோயை குணமாக்க கால அவகாசம் தேவைப்படும். ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியை பொறுத்தே, சரி செய்ய முடியும்.

நிரஞ்சன், ஹோமியோபதி மருத்துவர்.

 என் முகம் பொலிவிழந்தது மட்டுமல்லாமல், முகத்தில் கரும் புள்ளிகள் உள்ளன. இதற்கு 'பீலிங்' சிகிச்சை செய்யலாமா?

நஸ்ரின் சுல்தானா ஷேக், கிரீம்ஸ் சாலை, சென்னை.

'பீலிங்' செய்து கொள்ளலாமா, வேண்டாமா என்பதை மருத்துவர் தான் தீர்மானிக்க வேண்டும். காரணம், மனிதனுடைய சருமம், ஒருவருக்கொருவர் மாறுபடும். 'பீலிங்' செய்து கொள்வதால் பாதிப்பேதும் இல்லை. 'பீலிங்' சிகிச்சையில், குறைந்தளவு வீரியம் கொண்ட அமிலங்களே பயன்படுத்தப்படுகின்றன. பாதிக்கப்பட்ட ஒருவரது சருமத்தை, மருத்துவர் பரிசோதித்த பின்பே, அதற்கேற்றவாறு, 'கெமிக்கல் பீலிங்'

செய்யப்படும். மருத்துவரின் அனுமதி இல்லாமல், 'பீலிங்' செய்யக் கூடாது. பரு, பொலிவிழந்த முகம், சருமம் கறுத்துப் போதல், கரும் புள்ளிகள், மங்கு, கருவளையம் உள்ளோர் ,'பீலிங்' சிகிச்சை மேற்கொள்ளலாம்.

ரத்னா, சரும நிபுணர், திருச்சி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us