sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

கேள்வி பதில்

/

கேள்வி பதில்

கேள்வி பதில்

கேள்வி பதில்


PUBLISHED ON : அக் 21, 2015

Google News

PUBLISHED ON : அக் 21, 2015


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தெ. நந்தா, திருவொற்றியூர், சென்னை: என் நண்பன், ஒரு விபத்தில் மூளைச்சாவு அடைந்து விட்டான். உறுப்புகள் தானம் அளிக்கப்பட்டன. ஒருவர், மூளைச்சாவு அடைந்துவிட்டார் என்பதை எவ்வாறு உறுதி செய்கின்றனர்?

மூளைச்சாவு அடைந்துவிட்டதை உறுதிப்படுத்த, மூளைத் தண்டு உயிர்ப்புடன் உள்ளதா, வேலை செய்கிறதா என்பதை அறிய, சில சோதனைகள் செய்யப்படும். இதற்கு சில நிபந்தனைகள் உண்டு.

1. நோயாளி, கோமா நிலையில் செயற்கை சுவாச உதவியுடன் இருக்க வேண்டும்.

2. வலி அல்லது சத்தத் தூண்டல் எதற்கும், நோயாளியின் உடல் பதில் வினை ஆற்றாமை இருக்க வேண்டும்.

3. சரி செய்ய முடியாத அளவுக்கு, மூளை சேதமடைந்ததற்கு என்ன காரணமென்று தெரிந்திருக்க வேண்டும்.

இந்த மூன்று நிபந்தனைகளும் பொருந்திய நிலையில், எளிய நுணுக்கமான சில பரிசோதனைகள் மூலம், மூளைச்சாவு உறுதி செய்யப்படுகிறது.

- அ. அமலோற்பவநாதன், நாளமில்லா சுரப்பி அறுவை சிகிச்சை நிபுணர், தமிழ்நாடு உறுப்பு மாற்று மைய ஒருங்கிணைப்பாளர், சென்னை

சி. பார்த்திபன், மதுரை: தம்பதியரில் ஒருவர், மனநிலை பாதிக்கப்பட்டிருக்கும்போது, தாம்பத்ய உறவில் ஈடுபடலாமா?

தம்பதியரில் ஒருவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருப்பது இயல்பான உறலுறவுக்கு பெருந்தடை. மனச்சோர்வு, பதற்றம், கடுமையான மன அழுத்தம், தூக்கமின்மை போன்றவை, உடலுறவு நாட்டத்தையே தடுத்து விடுகின்றன.

முழுமையான தாம்பத்ய உறவுக்கு, நல்ல மனநிலை அவசியம். மனநிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உடலுறவு என்பது, சித்ரவதைக்கு சமானம். துணைவர் குணம் அடைய, நீங்களும் துணை நின்றால், விரைவாக பிரச்னை தீர்ந்து விடும்.

- மா. மனோகரி, பொதுமருத்துவர், சென்னை.

கே. கண்ணன், மயிலாடுதுறை: மனரீதியாக நான் என் மனைவியை காயப்படு்துகிறேன் என்பது, என்கே தெரிந்த ஒன்று. பாசத்தின் மிகுதியால் இது நடக்கிறது. உண்மையிலேயே ஓர் ஆண் எப்படி இருக்க வேண்டும்?

வேலைகளை பகிர்ந்து கொள்வான். கண்ணியத்தை கடைபிடிப்பான். தீய பழக்கங்களை எதிர்ப்பான். காதலை, அன்பை போற்றுவான். ஆபாசத்தை கொண்டாட மாட்டான். வன்முறையை வெறுப்பான். சமூக பொறுப்பு மிக்கவனாக நடந்து கொள்வான். சிறந்த ஆண், குடும்பத்திற்கு, பெண்களுக்கும் பாதுகாவலனாக இருப்பான்.

- த. சத்யா, மனநல மருத்துவர், சென்னை.






      Dinamalar
      Follow us