PUBLISHED ON : அக் 21, 2015

01. 'டயாபடிக் நியூரோபதி' என்றால் என்ன?
சர்க்கரை நோயாளிகள், சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கவில்லை எனில், அது நரம்பு மண்டலம், ரத்தக் குழாய், இதயம் என, உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பையும் பாதிக்கும். சர்க்கரை அளவு அதிகரிப்பால், நரம்பு மண்டலம் பாதிக்கப்படும்போது, அதை 'டயாபடிக் நியூரோபதி' எனப்படுகிறது.
02. 'டயாபடிக் ரெட்டினோபதி' என்றால் என்ன?
சர்க்கரை நோயால், சிறுநீரகம் பாதிக்கப்படுவதை 'டயாபடிக் ரெட்டினோபதி' என்கின்றனர்.
03. ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தால் பார்வை பாதிக்கப்படுமா?
எந்த ஒரு பிம்பத்தையும் பார்ப்பதற்கு விழித்திரை அவசியம். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிரிக்கும்போது, விழித்திரைக்கு செல்லும் நுண்ணிய ரத்தக்குழாய்கள் பாதிக்கப்படும். ரத்தக்குழாய்களில் கசிவு ஏற்படும். புதிது புதிதாக ரத்தக்குழாய்கள் வளைர ஆரம்பிக்கும். அதனால் பார்வை மங்கலாகத் தெரியும்.
ஒரு கட்டத்தில், ரெட்டினா முழுவதையும் மறைக்கும் அளவுக்கு ரத்தக் கசிவு ஏற்படும். இதனால், பார்வையே பறிபோய்விடும்.
04. 'டயாபடிக் ரெட்டினோபதி' இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது?
பார்வையில் ஏதேனும் சிறு குறைபாடு இருப்பதை உணர்ந்தாலும், கண் அழுத்த அளவை பரிசோதிக்க வேண்டும். கண்ணில் சொட்டு மருந்தை விட்டு, 'இன்டைரக்ட் ஆப் தல்மோஸ்கோப்பி' என்ற பரிசோதனை மூலம் ரத்தக்குழாய் விரிசல், ரத்தக் கசிவு ஏதேனும் இருக்கிறதா என பரிசோதித்து, சிகிச்சை அளிக்கப்படும்.
05. 'டயாபடிக் ரெட்டினோபதி'யில் வகைகள் உள்ளனவா?
'டயாபடிக் ரெட்டினோபதி'யில், 10 விதமான நிலைகள் உள்ளன. முதல் ஐந்து நிலைக்குள் இருக்கும்பட்சத்தில், எந்தவித சிகிச்சையும் தேவையில்லை. சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம், டயாபடிக் ரெட்டினோபதியின் தீவிரத்தைத் தடுக்க முடியும்.
06. ஐந்து நிலைகளை கடந்ததும், சிகிச்சை செய்ய வேண்டுமா?
ஆறு முதல் பத்து நிலைகளில் இருந்தால், ரத்த குழாய்கள் விரிசல் அடைந்துள்ளதா, ரத்தம் எவ்வளவு கசிகிறது. ரத்தக்குழாய்கள் வளர்ந்துள்ளனவா என்பதை கண்டறிந்து அதன் அடிப்படையில் லேசர் முறையில் கண்ணுக்குள், வௌ்ளைப்பகுதியில் 0.5-0.7 மி.மீ. அளவுக்கு மிகச் சிறிய துளையிட்டு நுண்ணிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.
07. ரெட்டினோபதியால் பாதிக்கப்பட்டோருக்கு, பார்வை மீண்டும் கிடைக்குமா?
முறையாக சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலமும், ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்வதன் மூலமும், மீதமிருக்கும் பார்வைத் திறனை காப்பாற்றிக் கொள்ளலாம்.
08. டயாபடிக் ரெட்டினோபதி பரம்பரை காரணமாகவும் வருமா?
குடும்பத்தில் யாருக்கேனும், சர்க்கரை நோய் இருந்து, அது பரம்பரையாக கடத்தப்பட்டிருந்தால், ரெட்டினோபதி பாதிப்பு ஏற்படலாம்.
09. டயாபடிக் ரெட்டினோபதி வராமல் எப்படி தடுக்கலாம்?
பத்து ஆண்டுகளுக்கு மேலாக சர்க்கரை நோய் இருப்பின், மருத்துவர்கள் பரிந்துரையோடு கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இந்த பிரச்னையை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலம், பார்வை இழப்பை தடுக்கலாம்.
10. டயபடிக் ரெட்டினோபதிக்க உணவுமுறை மாற்றும் தேவையா?
எந்த பொருளாக இருந்தாலும் அளவுக்கு மிஞ்சினால் ஆபத்து. எனவே புரதச்சத்து, மாவுச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் போன்ற சத்துக்கள் அடங்கிய உணவு வகைகளை, சரிவிகிதத்தில் எடுத்துக் கொண்டாலே போதுமானது.
- கா. நமிதா புவனேஸ்வரி,
கண் அறுவை சிகிச்சை நிபுணர்,
அரசு கண் மருத்துவமனை கண்காணிப்பாளர் மற்றும் பேராசிரியர், எழும்பூர், சென்னை.
94442 88784

