தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கேள்வி பதில்

கேள்வி பதில்

கேள்வி பதில்


PUBLISHED ON : டிச 30, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 30, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* எனக்கு வயது, 25. திருமணத்திற்கு ஏற்பாடு செய்கின்றனர். எனக்கு வாய் துர்நாற்ற பிரச்னை உள்ளது. இயற்கை வைத்திய முறையில் தீர்வு தேவை?

க.வினோத், புதுக்கோட்டை


வேப்பிலையில், 'ஆன்டி-மைக்ரோபியல்' என்ற பூஞ்சை எதிர்ப்புப் பொருள் ஏராளமாக உள்ளது. அதனால் தான் நம் முன்னோர், பற்களைத் துலக்க, வேப்பங்குச்சியைப் பயன்படுத்தினர். வேப்பங்குச்சியைக் கொண்டு தினசரி பற்களைத் துலக்கலாம் அல்லது வேப்பிலையை நீரில் போட்டு நன்கு கொதிக்கவிட்டு, அந்த நீரால் தினசரி மூன்று வேளை வாயைக் கொப்பளித்து வந்தால், வாய் துர்நாற்றம் நீங்கும்.

இப்பிரச்னைக்கு இயற்கை வழியில் நல்ல தீர்வு காண, ஒரு டம்ளர் நீரில், 1 சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து, அதில், 1/4 டீஸ்பூன் படிகாரத்தை சேர்த்து வடிகட்டி, அதைக் கொண்டு வாயைக் கொப்பளித்து வர, வாய் துர்நாற்றம் தடுக்கப்படும். படிகாரம், வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும், 'டாக்ஸின்'கள் மற்றும் அமிலங்களைத் தடுக்கும்.

வெ.தன்ராஜ், இயற்கை வைத்தியர், திருச்சி.

* எனக்கு வறண்ட சருமம். தற்போது குளிர்காலம் என்பதால், அதிகமாக தோல் உரிகிறது. இதை சரி செய்ய என்ன செய்வது?

ப.ஸ்ரீலேகா, சென்னை


ஒரு கிண்ணத்தில், 2 முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்து, அத்துடன், ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து, சருமத்தில் தடவி, சிறிது நேரம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால், அந்த பூச்சில் உள்ள வைட்டமின் 'ஈ' மற்றும் வைட்டமின் 'கே' அற்புத மாற்றங்களை நிகழ்த்தும்.

சுத்தமான தேங்காய் எண்ணெயில் உள்ள போதுமான அளவு 'பேட்டி ஆசிட்', சருமத்திற்கு ஈரப்பசையை வழங்கும். அதற்கு, இரவில் படுக்கும் முன், தேங்காய் எண்ணெய் கொண்டு முகத்தை மசாஜ் செய்து, மறுநாள் காலையில் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினசரி செய்தால், வறட்சியால் தோல் உரிவது தடுக்கப்படும்.

கே.திலகா, சரும நிபுணர், சென்னை.

* எனக்கு வயது, 28. நிறைய பீர் குடித்ததால், தொப்பை விழுந்துவிட்டது. தொப்பையை குறைக்க என்ன யோகாசனம் செய்யலாம்?

வி.தினேஷ், பாண்டிச்சேரி


சலபாசனம் செய்யலாம்! தரையில் குப்புறப்படுத்து, கைகளை வயிற்றுக்கு அடியில் வைத்துக்கொள்ள வேண்டும். பின் இரண்டு கால்களையும், மேலே உயர்த்த வேண்டும். முக்கியமாக, இப்படி கால்களை மேலே துாக்கும்போது மூச்சை உள்ளிழுத்து, 20 நொடிகள் இருந்து, பின் மூச்சை வெளியேவிட்டு, பழைய நிலைக்கு வர வேண்டும். இதனால், அடிவயிற்றில் உள்ள கொழுப்புக்கள் கரைந்து, தொப்பை குறையும்.

த.கிருஷ்ணன், யோக நிபுணர், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us