தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/முகம் ஜொலிக்கும்!

முகம் ஜொலிக்கும்!

முகம் ஜொலிக்கும்!


PUBLISHED ON : ஜன 03, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 03, 2016


Follow on Google
அ நிறம் | அளவு

தக்காளியை இரண்டாக நறுக்கி, முகத்தில் தடவினால், சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும். மோரை முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால், வறண்ட சருமம் புதுப் பொலிவடையும்.

பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம் கலந்து, முகத்தில் தடவி கழுவினால், அழகாகவும், பளபளப்பாகவும் மாறும். இளஞ்சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு டீஸ்பூன் உப்பு போட்டு, கண்களை கழுவினால், கண்கள் பிரகாசமாக இருக்கும்.

ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து, பாலுடன் கலந்து, சருமத்தில் தடவி, அரைமணி நேரம் கழித்து கழுவினால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும். தேங்காய்ப் பாலுடன், ஒரு டீஸ்பூன் தேன் கலந்து, முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால், சருமம் புத்துணர்ச்சி பெறும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us