தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கேள்வி - பதில்

கேள்வி - பதில்

கேள்வி - பதில்


PUBLISHED ON : ஜன 13, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 13, 2016


Follow on Google
அ நிறம் | அளவு

# என் மகளுக்கு, 11 வயது தான் ஆகிறது. 6ம் வகுப்பு படிக்கும் அவள், வயதிற்கு வந்து விட்டாள். முன்பூப்படைதல் ஏன் நிகழ்கிறது?

ச.வித்யா, திருவண்ணாமலை



மூளையில் உள்ள, 'ஹைப்போதாலமஸ் பிட்யூட்டரி' எனும் ஹார்மோன் தூண்டல் தான், இனப்பெருக்க அமைப்பின் வளர்ச்சிக்கும், செயல்பாட்டிற்கும் அடிப்படையாக உள்ளது. இப்பகுதியில் ஹார்மோன் உற்பத்தி, இயல்பை விட முன்பாகவே துவங்கி விடுவதால், முன்பூப்படைதல் ஏற்படுகிறது. அதோடு, பிளாஸ்டிக் பொருட்களில் உள்ள, 'பைஸ்பீனால்' என்ற

வேதிப்பொருளும், முன்பூப்படைதலை உண்டாக்குகிறது.இதுதவிர, மாமிசம், பால் போன்ற கொழுப்பு நிறைந்த பொருட்களில் உள்ள வளர்ச்சி ஹார்மோன்கள், முன்பூப்படைதலை ஏற்படுத்துகின்றன. சூரிய ஒளி படாமல் வளரும் குழந்தைகளுக்கு, 'வைட்டமின் - டி' குறைபாடு ஏற்பட்டு, முன்பூப்படைதல் நிகழ்கிறது.

வை.கிருபா, பெண்கள் நல மருத்துவர், சென்னை

# எனக்கு வயது, 24. செயின் அணிவதால், கழுத்தைச் சுற்றி தோல் கருமை அடைந்துள்ளது. அதை போக்க என்ன செய்யலாம்?

த.ஸ்ரீஷா, சென்னை.

கற்றாழை சோற்றில், 'ஆன்டி -ஆக்ஸிடன்ட்டுகள்' நிறைந்துள்ளன. அது, சிறந்த ஸ்கின் லைட்னரும் கூட. எனவே, கற்றாழை சோற்றை கழுத்தில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும் அல்லது இரவில் படுக்க போகும் முன், கழுத்தில் சோற்றைத் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவலாம். தினசரி செய்து வந்தால், நல்ல மாற்றத்தை காணலாம்.

சோ.திலகா, அழகு கலை நிபுணர், சென்னை.

# என் மனைவியை, எங்களின் 2 வயது மகன் முன்னிலையில், கெட்ட வார்த்தையில் திட்டி உள்ளேன். சமீபத்தில் ஒரு பத்திரிகையில், 'குழந்தைகள் கெட்ட வார்த்தைகளை பேசுவதில்லை; கேட்ட வார்த்தைகளை பேசுகின்றனர்' என படித்தேன். என் மகனை, நான் எப்படி வளர்க்க வேண்டும்?

கா.சுந்தர், சென்னை.

உண்மை தான். உங்கள் மனைவியிடம், மகனின் எதிரிலேயே நீங்கள் கெட்ட வார்த்தையில் பேசினால், அவன் அதிலிருந்து என்ன கற்றுக் கொள்வான்; பெண்களை, உணர்வு மற்றும் உடல் ரீதியாக மதிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும். இதன் மூலம், அவனுக்கும் அந்த மதிப்பு திரும்ப கிடைக்கும்.எவரும் கவனிக்காத நிலையிலும் கூட, சரியானவற்றையே

செய்வது, நேர்மை, நற்பண்பு ஆகியவற்றை, பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுப்பது அவசியம். கடின உழைப்பின் மூலம், வெற்றியை அடைய முடியும் என்பதை, அவர்களுக்கு உணர்த்துங்கள். வலிமையுடன் வளர்ப்பதன் மூலம், சிறு வயதிலேயே அவர்களால் பொறுப்புக்களை ஏற்க முடியும். ஊதாரியாய் இருக்க அனுமதிக்காதீர்கள். முக்கியமற்ற தேவைகளைக் கட்டுப்படுத்தி, பணத்திற்கு மதிப்பளிக்கக் கற்றுக் கொடுங்கள்.

நா.சத்யா, மனநல ஆலோசகர், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us