தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கேள்வி- பதில்

கேள்வி- பதில்

கேள்வி- பதில்


PUBLISHED ON : செப் 07, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 07, 2016


Follow on Google
அ நிறம் | அளவு

என் மகளுக்கு, 29 வயதாகிறது. ஒருநாள், திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. டாக்டரிடம் காட்டியதில், ECHO எடுத்துப் பார்த்து, இதயத்தைச் சுற்றி நீர் கோர்த்திருப்பதாகக் கூறி அதை அகற்றினர். இரண்டாவது முறையும் இதைப் போலவே செய்தனர். மூன்றாவது முறை பரிசோதனை செய்ததில், இதயத்திற்கும், நுரையீரலுக்கும் நடுவில் சிறிய அளவில் புற்றுநோய் கட்டி இருப்பதாகச் சொல்கின்றனர். இந்தக் கட்டியை அகற்றிவிட்டால், என் மகளுக்கு நிவாரணம் கிடைக்குமா?

செந்திரு, கோவை

நீங்கள் சொல்லும் விபரங்களை வைத்துப் பார்க்கும் போது, உங்கள் மகளுக்கு புற்றுநோய் இருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் அரிது என்று தோன்றுகிறது. என்னுடைய அனுபவத்தில், 29 வயதில் இதயத்தைச் சுற்றி நீர் கோர்ப்பது (pericardium effusion) என்பது புற்றுநோயை விடவும் காச நோயாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இதுதவிர சிறுநீரகங்கள், கல்லீரல் போன்றவற்றில் ஏதாவது கோளாறுகள் இருக்கலாம். இதில், நீங்கள் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. இதுவரையிலும் வெறுமனே இதயத்தைச் சுற்றியுள்ள நீரை மட்டுமே எடுத்து இருக்கின்றனரா, வேறு பரிசோதனை எதுவும் செய்யவில்லையா என்ற விபரம் இல்லை. கட்டி இருப்பதாகக் கூறுகிறீர்கள். கட்டியில் இருந்து சிறு துளி எடுத்து (biopsy) பரிசோதனை செய்ய வேண்டும். நீங்கள், ஒரு இதய, நுரையீரல் சிறப்பு மருத்துவர் (cardio thorasic) அல்லது சுவாசக் கோளாறுகளுக்கான சிறப்பு மருத்துவரின் (pulmonology) ஆலோசனையைப் பெறுவது அவசியம்.

டாக்டர் ரவீந்திரன் குமரன்

புற்றுநோய் அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர்,

அட்மெர்ட் மெடிக்கல் சென்டர், சென்னை

என் மகனுக்கு வயது, ஐந்தரை. அவன் எடை, 25.8 கிலோ. இது, அவன் வயதுக்கு அதிகம் என்று சொல்லப்படுகிறது. அவன் வயது குழந்தைகள், 18 கிலோ தான் இருக்க வேண்டும் என்று கேள்விப்பட்டேன். தினமும் இரண்டு வேளை, ஊட்டச்சத்து பானம் பருகுகிறான். அது தரலாமா, கூடாதா? அவன் எடையை எவ்வாறு குறைப்பது? என்ன மாதியான உணவுகள் தரலாம்?

காயத்ரி, கருவம்பாளையம், திருப்பூர்

நிச்சயமாக, உங்கள் குழந்தை அதிக உடல் எடையுடன் தான் இருக்கிறான். நீங்கள் குறிப்பிட்ட ஊட்டச்சத்து பானம் குழந்தைகளுக்கு தர வேண்டிய அவசியம் ஏதுமில்லை. அதற்கு பதிலாக, நவதானியங்கள், ராகி இவற்றில் உலர் கொட்டைகள் சேர்த்து சத்து மாவுக் கஞ்சி காய்ச்சி கொடுக்கலாம். தற்போது கடைகளிலேயே இதுபோன்ற சத்துமாவு கிடைக்கிறது. குழந்தை பழகிவிட்டான், ஊட்டச்சத்து பானத்தை உடனடியாக நிறுத்த முடியவில்லை என்றால், ஒரு டம்ளர் பாலில் ஒரு சிறிய டீஸ்பூன் மட்டும் போட்டு கொடுங்கள். முடிந்த அளவு துரித உணவுகள், எண்ணெயில் பொரித்த, வறுத்த ஸ்நாக்ஸ் வகைகளை தவிர்த்து, நிறைய பழங்கள், காய்கறிகள் சாப்பிட பழக்குங்கள். சுவை என்பது பழக்கத்தினால் ஏற்படுவது தான். அதனால், குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளை பழக்கிவிட்டால் போதும்.மிக முக்கியமான விஷயம், உங்கள் குழந்தை, ஏதாவது ஒரு விளையாட்டை தினமும், குறைந்தது அரை மணி நேரம் முதல், 45 நிமிடங்கள் வரை விளையாடுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும. இந்த, 45 நிமிடங்களும் நன்றாக ஓடியாடி விளையாட வேண்டும். இதைப் பின்பற்றினாலே உடல் எடை தானாக குறைந்துவிடும்.

டாக்டர் தாரிணி கிருஷ்ணன்

ஊட்டச்சத்து நிபுணர், சென்னை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us