உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : செப் 07, 2016

அ நிறம் | அளவு
# வெள்ளரிச் சாறும், பன்னீரும் சம அளவில் கலந்து, கண்களைச்சுற்றிலும் தடவி, மசாஜ் செய்யலாம்#துாங்கப் போகும் முன், கண்களின் கீழ் ஆலிவ் எண்ணெய் தடவலாம்
#வெண்ணெயுடன் கொத்தமல்லிச் சாறு கலந்து கண்களுக்கு பேக் போடலாம்
#சந்தனம் மற்றும் ஜாதிக்காயை இழைத்து, கண்களை சுற்றிலும் பூசலாம்
#தேனில் திருநீறைக் குழைத்து, கருவளையத்தின் மீது தடவி, 10 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவலாம்
#தோல் நீக்கிய தக்காளி விழுது, விதை நீக்கிய கறுப்பு திராட்சை விழுது இவற்றை கண்களின் மீது பூசலாம்
#ஊற வைத்த பாதாமை பாலுடன் சேர்த்து மை போல அரைத்து, கண்களைச் சுற்றிலும் பேக் போடலாம்
#பப்பாளியின் சதைப் பகுதியை பாலாடையுடன் சேர்த்து மசித்து, முகம், கழுத்துப் பகுதியில் பூசி, 20 நிமிடங்கள் கழித்துக் கழுவலாம்.
ஆனி ஜான், அழகுக்கலை நிபுணர், துாத்துக்குடி
