தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/பத்து கேள்விகள் பளிச் பதில்கள்

பத்து கேள்விகள் பளிச் பதில்கள்

பத்து கேள்விகள் பளிச் பதில்கள்


PUBLISHED ON : ஆக 31, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 31, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தடுப்பூசி குழந்தைகளுக்கு மட்டுமா, முதியவர்களுக்கும் போட வேண்டுமா?

நோய்த் தொற்றுக்கான வாய்ப்பு, எல்லா வயதினருக்கும் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்த முதியவர்கள், கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

என்னென்ன தடுப்பூசிகள் போடலாம்?

நிமோனியா, முத்தடுப்பு, சின்னம்மை, ப்ளு காய்ச்சல், டைபாய்டு, ஹெபடைட்டிஸ் எனப்படும் மஞ்சள் காமாலை, ரேபிஸ், காலரா போன்ற நோய்களுக்கு தடுப்பூசிகள் அவசியம்.

நிமோனியா ஊசி எதற்கு? அதன் அறிகுறிகள் என்ன?

வைரஸ் பாக்டீரியா, பூஞ்சை, நுண்கிருமிகள் இவற்றில் ஏதாவது ஒன்றின் பாதிப்பால், நுரையீரலில் ஏற்படும் தொற்று நிமோனியா. முதியவர்கள் அதிகம் நிமோனியாவால் தான் பாதிக்கப்படுவர். கடுமையான காய்ச்சல், மூச்சுவிடுவதில் சிரமம், நெஞ்சு வலி போன்றவை இதன் அறிகுறிகள்.

முத்தடுப்பு ஊசி என்பது, மூன்று வகை நோய்களுக்கானதா?

ஆம். டெட்டனஸ், டிப்தீரியா, கக்குவான் இருமல். இந்த மூன்று பிரச்னைகளுக்கும் சேர்த்து, போடப்படும்.

முதியவர்களுக்கும் சின்னம்மை தடுப்பூசி அவசியமா?

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், முதியவர்களுக்கு சின்னம்மையின் தாக்கம் அதிகம் இருக்கும்.



ப்ளூ காய்ச்சலுக்கான தடுப்பூசியை முதியவர்களுக்கு எப்போது போட வேண்டும்?

மழை, குளிர்காலத்தில் இதன் பாதிப்பு அதிகம் இருக்கும் என்பதால், மழை காலம் தொடங்குவதற்கு முன் போட வேண்டும்.

மழைக்காலத்தில் வரும் டைபாய்டிற்கு தடுப்பூசி உள்ளதா?

மழைக்காலத்தில், டைபாய்டின் பாதிப்பு அதிகம் இருக்கும் என்பதால், இதற்கான தடுப்பூசியை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை போட வேண்டும்.

காய்ச்சல் வகைகளைத் தவிர, அதிக பாதிப்பை ஏற்படுத்தும் மற்ற நோய்கள் எவை?

காய்ச்சலைத் தவிர, 'ஏ, பி, சி, ஈ,' வகை ஹெபடைட்டிஸ் வைரஸ்கள், அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஹெபடைட்டிஸ், 'ஏ,பி,' வைரஸ்களுக்கு, சிகிச்சை இல்லை. ஆனால், தடுப்பூசி இருக்கிறது. ஹெபடைட்டிஸ், 'சி, ஈ' க்கு தடுப்பூசிகள் இல்லை. ஆனால், சிகிச்சை உண்டு.



கர்ப்பப்பை வாய் புற்று நோய்க்கு முதியவர்கள் கூட தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா?


கர்ப்பப்பை வாய் புற்று நோய்க்கான தடுப்பூசியை, ஆண், பெண் இருவரும் போட்டுக் கொள்ளலாம். ஆனால், பருவமடையும் வயதிலேயே, போட்டுக் கொள்ள வேண்டும்.

முதியவர்களை நோய்களிலிருந்து எவ்வாறு பாதுகாக்கலாம்?

மருந்துகள், உணவு கட்டுப்பாடு அவசியம். இதோடு மேற்சொன்ன தடுப்பூசிகளை தகுந்த இடைவெளியில், டாக்டரின் ஆலோசனைப்படி போட வேண்டும்.

எஸ்.எம். ராஜேந்திரன்

பொது மற்றும் நீரிழிவு

சிறப்பு நிபுணர்.சென்னை.

98941 18899

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us