தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கேள்வி - பதில்

கேள்வி - பதில்

கேள்வி - பதில்


PUBLISHED ON : ஜன 10, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 10, 2017


Follow on Google
அ நிறம் | அளவு

என்னுடைய மனைவிக்கு, கொலஸ்ட்ராலின் அளவு அதிகமாக உள்ளது என, பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இதனால், மருத்துவரை சந்தித்த போது, கொலஸ்ட்ரால் அதிகமிருந்தால், எதிர்காலத்தில் இதய நோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்கிறார். தெளிவான விளக்கம் தேவை.

எஸ்.கிருபாகரன், தேனீ

செல்களின் இயல்பான இயக்கத்திற்கு, கொழுப்பு மிக அவசியம். பல முக்கியமான மூலக்கூறுகள் மற்றும் சத்துக்கள், உடலிலிருந்து மற்ற பாகங்களுக்கு கடத்திச் செல்ல கொழுப்பு அவசியம். அதுபோல், கொழுப்பும், கொலஸ்ட்ராலும் ஒன்று என, நிறைய பேர் நினைக்கின்றனர்; அது தவறு. கொழுப்பில் பல வகைகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான், கொலஸ்ட்ரால். அதிக கொழுப்பு உள்ளவர்கள் எல்லாருக்கும், இதய நோய் வராது. இதய நோய் வருவது, மரபியல் சம்பந்தப்பட்டதும் கூட. தமனிகளில் கொழுப்பு படியும் போது தான், இதய நோய் உருவாகிறது. இயற்கையாக உருவாகும் கொலஸ்ட்ரால், எரிபொருளாக மாற்றப்படக்கூடிய சதவீதத்தைப் பொறுத்து, இதய நோய்கள் உருவாகிறதே தவிர, கொலஸ்ட்ரால் அதிகமானாலே, இதய நோய் வர வேண்டுமென்பதில்லை. உங்கள் உடல் முதிர்ச்சி அடைய அடைய, கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும். இது இயற்கையானது. குறிப்பாக பெண்களுக்கு வயதாகும் போது, கொழுப்பு அதிகமாகிறது. இதனால் தான், வயதானவர்களுக்கு, இதய நோய் அதிகரிக்கிறது. சாப்பிடுவதற்கு முன், கொலஸ்ட்ரால் பரிசோதனை எடுப்பதைவிட, சாப்பிட்ட பின் பரிசோதனை செய்தால் தான், மிகச் சரியான கொலஸ்ட்ரால் அளவை கணிக்க முடியும் என, மருத்துவ இதழ் ஒன்று, ஆய்வை வெளியிட்டுள்ளது.

மு.ராகவன், பொது மருத்துவர், சென்னை

எனக்கு தலைவலி உள்ளது. இதோடு, பனி மற்றும் மழைக்காலங்களில், பித்த வெடிப்பு வந்துவிடுகிறது. ஆங்கில மருத்துவ முறையில், மருந்துகள் எடுத்தும் பயனில்லை. இவ்விரு பிரச்னைக்கும், வீட்டு வைத்திய முறையிலோ, சித்த வைத்திய முறையிலோ, ஏதேனும் தீர்வு உண்டா?

தா.மனோகரி, மேடவாக்கம்

தலைவலிக்கு உப்பு, மிளகு அரைத்து, நெற்றியில் பற்று போட்டால், தலைவலி மற்றும் ஒற்றை பக்கத் தலைவலி நீங்கும். பித்த வெடிப்பிற்கு மருதாணி இலையில், தயிர் விட்டு நன்றாக அரைத்து, இரவு படுக்க போகும் முன், கால்களில் தடவி வந்தால் பித்த வெடிப்பு நீங்கும்.

கு.சாரதா, சித்த வைத்தியர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us