தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கேள்வி - பதில்

கேள்வி - பதில்

கேள்வி - பதில்


PUBLISHED ON : ஜன 25, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 25, 2017


Follow on Google
அ நிறம் | அளவு

என் மகன் ஒரு பொருளை, இரண்டு நிமிடத்திற்கு மேல் வைத்து விளையாடுவதில்லை. மருத்துவர் இதற்கு, 'ஹைப்பர் ஆக்டிவிட்டி' என்கிறார். இதுபற்றி விளக்குங்களேன்?

து.ரூபா, சித்தாலப்பாக்கம்.

சில குழந்தைகள், ஒரு இடத்துல இருக்க மாட்டாங்க, ஓடிக்கிட்டே இருப்பாங்க. தொடர்ந்து, விளையாட மாட்டாங்க; சொல்வதை கவனிக்க மாட்டாங்க. சிலர் ரொம்ப அமைதியான குழந்தைகளா கூட இருப்பாங்க. இதுதான், ஹைப்பர் ஆக்டிவிட்டி. இது ஸ்கூல் மற்றும் வீடுகள்ல வெளிப்படும்.

இப்பிரச்னையை எப்படி கண்டுபிடிப்பது?

எல்லா குழந்தைகள் மாதிரி தான், இவர்களும். ஒரு சில சந்தர்ப்பங்களில் மட்டும் தான், ஹைப்பரா இருக்காங்கன்னே தெரிய வரும். இது வியாதி கிடையாது. அறிகுறிகளோடு தெரியக்கூடிய, ஒரு சிறு குறைபாடு. இக்குழந்தைகள் நல்லா படிப்பாங்க. ஆனா டீச்சர் சொல்றதை கவனிப்பாங்களான்னா நிச்சயமா தெரியாது. பரிட்சையில நல்ல மார்க் எடுப்பாங்க; புத்திசாலியா இருப்பாங்க. இப்பிரச்னைக்கு மரபணு கோளாறு காரணம் என,

சொல்லிவிட முடியாது. கருவிலிருந்து வரக்கூடிய தன்மை மாறுதலால் ஏற்படுகிறது. கர்ப்பத்தின் போது, தாய் மன அமைதியாக இருப்பது அவசியம். தாய் ஒரு வித மன அழுத்தத்தோடு இருந்தால், பிறக்கும் குழந்தைகளுக்கு, இது போன்று பல பிரச்னைகள் ஏற்பட காரணமாகலாம். இவர்கள், ஒரு பொருளுடன் விளையாடுவதே, இரண்டு நிமிடம் தான். அதிகபட்சம், ஐந்து நிமிடம் ஒரு பொம்மையுடன் விளையாடுவர். எல்லாவற்றிலும் ரொம்ப வேகமா இருப்பாங்க. பொம்மையை கூட விளையாட்டுப் பொருளா நினைக்கமாட்டாங்க. ஏதோ ஒரு பொருளாகத் தான் பார்ப்பர்.படிப்பு, விளையாட்டு, தனித்திறமை மற்ற எந்த செயல்களாக இருந்தாலும், பெற்றோர் ஹைப்பர் ஆக்டிவிட்டி குழந்தைகளுடன் இருந்து, நேரத்தை செலவிட்டு, அவர்களுக்கு மேற்சொன்ன விஷயங்களை கற்றுக் கொடுங்கள்.முன், கூட்டுக்குடும்பங்கள் இருந்ததால், குழந்தைகளை பார்த்துக் கொள்வதற்கு உறவினர்கள் இருந்தனர். தற்போது, தனிக்குடித்தன முறை உள்ளதால், பெற்றோர் இதுபோன்ற குழந்தைகளை கவனித்துக் கொள்ள கஷ்டப்படுகின்றனர். எனவே, இக்குழந்தைகளை மிகவும் கவனமாக கையாண்டால் புத்திசாலியாக திகழும்.அவர்களின் எனர்ஜியை ஆக்கப்பூர்வமாக செலவிடவிடுங்கள். மசாலா மற்றும் அசைவ உணவுகளை, குறைத்து உண்ணக் கொடுங்கள் அல்லது தவிர்த்து விடுங்கள். ஹைப்பர் ஆக்டிவிட்டிக்கான தக்க நிபுணர்களை சந்தித்து, இவ்வகை குழந்தைகளின் மென்டல் மற்றும் பிசிக்கல் எனர்ஜியை எப்படி சமன்படுத்துவது என, கேட்டு அறியுங்கள்.


ஈ. ஷெரிபா

குழந்தைகள் நல நிபுணர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us