தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/டாக்டரின் டைரிகுறிப்பு

டாக்டரின் டைரிகுறிப்பு

டாக்டரின் டைரிகுறிப்பு


PUBLISHED ON : ஜன 25, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 25, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜனவரி, 24, 2017: சத்தியதாசை நினைக்கும் போது, என் மனம் சங்கடப்படுகிறது. 20 ஆண்டுகள் கடந்தும், அவரது மரணம் ஏற்படுத்திய பாதிப்பை, ன்றும், என்னால் மறக்க முடியவில்லை. மாநகர பேருந்தில், கண்டக்டராக இருந்தவர். திருமணமாகி, அழகான மனைவி பத்மாவதி. இரண்டு ஆண் பிள்ளைகள் அவருக்கு. கூடவே துணையில்லாத தன் தங்கையையும், அவரது மகளையும் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு வேறு. தங்கை வேலைக்கு செல்வதால் தங்கையும், தங்கை மகளும் இவரது வீட்டில் தஞ்சம்.உண்மையில், தங்கை மகளின் மேல் அத்தனை பாசம். சத்தியதாசுக்கு, ஏற்கனவே, இரண்டு முறை மாரடைப்பு வந்திருக்கிறது. முதல் முறை வந்தபோது, குடும்பத்தினரிடம் மறைத்துவிட்டார். இரண்டாம் முறை வந்தபோது, குடும்பத்திற்கு தெரிந்துவிட்டது. இதனால், அவரை எந்த தொந்தரவும் செய்யாமல், மருத்துவ விடுப்பில் சில மாதங்கள் இருக்க வைத்துவிட்டனர். விடுப்பு முடிந்து, வேலைக்கு செல்ல ஆரம்பித்தார். உணவுக் கட்டுப்பாடு இல்லாமை மற்றும் மனஅமுத்தம் காரணமாக, மூன்றாவது முறையும் மாரடைப்பு ஏற்பட்டு நடு ரோட்டில் விழுந்து இறந்துவிட்டார். அவரை நம்பியிருந்த குடும்பம், அவரது இழப்பை ஈடுசெய்ய முடியாமல் தவித்தது. நம் நாட்டில் ஆண்களானாலும்,

பெண்களானாலும், இளம் வயதிலேயே, கடுமையான மாரடைப்புக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. மற்ற நாடுகளை காட்டிலும், நம் நாட்டில்

மாரடைப்பு, 30 - 45 வயதினரை அதிகம் பாதிப்பது மட்டுமின்றி, அதன் வீரியமும், விளைவுகளும் மிகக் கடுமை. கரோனரி தமனிகள் கொண்டு செல்லும் இரத்தத்தில் இருந்து இதயமும், உடலின் மற்ற பாகங்களும், தேவையான உணவையும், ஆக்சிஜனையும் பெற்றுக் கொள்கின்றன. இந்த இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால், இதயத் தசைகள் இரத்தம் கிடைக்கப் பெறாமல் இறக்கின்றன. இதுவே, மாரடைப்பு என்றழைக்கப்படுகிறது. மாரடைப்பின் தீவிரத் தன்மை இதயத் தசைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பைப் பொறுத்து அமைகிறது. இறந்த தசைகள், இதயத்தின் இரத்தம் செலுத்தும் திறனைக் குறைத்து, அதன் செயல்பாட்டினை

வெகுவாக பாதிக்கலாம். பாதங்களில் வியர்த்தல் மற்றும் மூச்சுவிட முடியாமை போன்ற காரணங்கள் இரண்டு.புகை பிடித்தல், உயர் ரத்த அழுத்தம், உடலின் எடை, உடற்பயிற்சியின்மை, சர்க்கரை நோய் என அழுத்தம், அதீத கோபம் மற்றும் படபடப்பு, வயது, பரம்பரையாக வரும் மரபணுத்தன்மை. நெஞ்சுவலியுடன் மூச்சுவிடுவதில் சிரமம் மற்றும் இறுக்கம். வியர்த்தல், குமட்டல் மற்றும் மயக்கம் வருவது போல் உணர்தல். மார்பின், முன்

பகுதியிலோ அல்லது நெஞ்சுக்கூட்டின் பின்புறமோ வலி இருக்கலாம். இங்கிருந்து வலி, கழுத்து அல்லது இடக்கைக்கு பரவலாம்.வாந்தி, இருமல், படபடப்பு மற்றும், 20 நிமிடங்களுக்கு மேல் தொடரும் வலி.

எக்கோ-கார்டியோகிராம் என்பது இதயத்தின் செயல்பாடுகளை அறிய உதவும், புதிய ஸ்கேன் முறை l கரோனரி ஆஞ்ஜியோகிராம் என்ற பரிசோதனை கரோனரி இரத்தக்குழாய்களில் அடைப்பு உள்ளதா என, உறுதியாக கணித்துக் கூறும். மாரடைப்புக்கு என, மருத்துவ முன்னேற்றங்கள் வந்துவிட்டன. நோயாளியின் உடல் நிலையை பொறுத்து, மருத்துவமுறையை தேர்வு செய்வோம்.

சி. பரத் குமார், இதய அறுவை சிகிச்சை நிபுணர்.

சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us