நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தேங்காய் எண்ணெயை இதய நோயாளிகள் தலைக்கு தேய்ப்பதற்கு பயன்படுத்தலாமா?
எஸ். பிரபாகர், மதுரை.
தேங்காய் எண்ணெயில், 'குச்tதணூச்tஞுஞீ ஊச்t' என்ற கொழுப்புச் சத்து அதிகமாக உள்ளது. எனவே இதை சமையலுக்கு பயன்படுத்தவே கூடாது. பயன்படுத்தினால் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படும் தன்மை அதிகம் உள்ளது. ஆனால், தலைக்கு தேய்ப்பதில் தவறில்லை. தாராளமாக தலையில் தேய்ப்பதற்கு பயன்படுத்தலாம்.
*சாக்லேட் சாப்பிடுவது இதயத்திற்கு நல்லதா? எஸ். சுஜாதா, கோவை
சாக்லேட் சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது தான். சாக்லேட் சாப்பிடுவோருக்கு இதய நோய் வருவது, 30 சதவீதம் குறைகிறது என தெரிகிறது. சாக்லேட்டில் உள்ள 'கொக்கோ' ரத்தக் குழாய்களுக்கு, பல வழிகளில் நன்மையை அளிக்கிறது என, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டாக்டர் சி.விவேக்போஸ் மதுரை.