PUBLISHED ON : ஜூலை 31, 2011
நீரிழிவு
டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ், மூலிகை மருத்துவர், மதுரை
நீரிழிவு நோயை கட்டுப்படுத்த முடியுமா?
- நீலகண்டன், கோவை
இனிப்பு சுவையானது, கபம் என்னும் ஐயத்தை அதிகப்படுத்துவதாக சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. கபத்தை வளர்க்கும் உணவுகள் யாவும், இரைப்பை நோய்க்கு மனிதனை அழைத்துச் செல்லும் உணவுகள். கப உணவுகளை அதிகமாக உண்ணுவதால், மதுமேகம் உண்டாகிறது. அந்த மதுமேக நோயில், வளி என்னும் தோடம் பாதிக்கப்படுவதால், நோயாளி உடல் மெலிந்து, சதை வற்றி, எலும்பும் தோலுமாய் ரத்தம் உற்பத்தி குறைந்து, ஏழு உடற்தாதுக்களும் கெட்டு காணப்படுவர்.
மேலும், அடிக்கடி, பல நிறங்களில் சிறுநீர் செல்வதுடன், உடல் வறண்டு, வியர்வை பெருகி, அத்தியாவசிய உறுப்புகள் பாதிக்கப்படுவர். இறுதியாக, உடல் வலிமை குறைந்து, பருத்து, மூச்சுத் திணறி, வியர்த்துக் காணப்படுவர்.
கேடடைந்த தோடங்களின் அடிப்படையில் சிகிச்சையளித்தால், நீரிழிவு கட்டுப்படுவதுடன், குணமடையவும் வாய்ப்புண்டு என்று சித்த மருத்துவம் தெளிவாக குறிப்பிடுகிறது.
