PUBLISHED ON : ஜன 03, 2016
கர்ப்பகாலத்தில் குழந்தை வளரும்போது, தாய் வயிற்றின் மைய பகுதியை நோக்கி, வளர்ச்சியடையும். இப்படி வளர்ச்சியடையும் போது, முதுகில் உள்ள தசைநார்கள் குழந்தையை சாய்த்து பிடித்து, கட்டுக்குள் வைத்து கொள்கிறது. இதுவே, கர்ப்ப காலத்தில் ஏற்படும், முதுகுவலிக்கு முக்கிய காரணம். வலியை குறைப்பது எப்படி?
1. வசதியான, பாதுகாப்பான இடத்தில், நாற்காலியை போட்டு உட்கார வேண்டும். இதில், சிறிய தலையணையை வைத்து, முதுகு மற்றும் கழுத்து பகுதியை, தலையணையில் நேராக வைத்து, சாய்ந்து கொள்ளலாம். எதிரே ஒரு நாற்காலி வைத்து, இரண்டு கால்களையும் நாற்காலி மேல் வைத்து, சிறிது நேரம் சாய்ந்தவாறு இருக்க வேண்டும். எதிரே வைக்கப்படும் நாற்காலி, உட்கார்ந்து இருக்கும் நாற்காலியை விட, சிறிதாக இருக்க வேண்டும்.
2. தரையில் உள்ள பொருட்களை எடுக்கும் போது, உட்கார்ந்து கால்களில் மடக்கி, எடுக்க வேண்டுமே தவிர, முதுகு பகுதியை அழுத்தக்கூடாது. குறைந்த எடையுள்ள பொருட்களை மட்டுமே, எடுக்க முயற்சிக்க வேண்டும். இதனால், முதுகுவலியை கட்டுப்
படுத்தலாம்.
3. முதுகு வலியைப் போக்க, வெப்பநிலை கொண்ட பொருட்களை, முதுகில் வைத்து ஒத்தடம் கொடுக்கலாம் அல்லது பனிக்கட்டிகளை வைத்து, முதுகு வலியை போக்கலாம். எண்ணெய் கொண்டு எளிய மசாஜ் செய்தாலும், வலியை போக்க முடியும்.
4. வழக்கமாக செய்யும் உடற்பயிற்சிகளை, தொடர்ந்து செய்வதன் மூலம், முதுகு வலியில் இருந்து விடுதலை பெற முடியும். தூங்கும் போது, இரண்டு முழங்கால்களையும் ஒரு பக்கமாக சாய்த்து, படுக்க வேண்டும். வயிற்றுக்கு கீழ் முழங்கால் பகுதியில், ஒரு தலையணையை வைத்து உறங்கலாம். இவை, முதுகு வலியை குணப்படுத்தும்.
05. மிருதுவான கைகள் பெற நல்ல ஐடியா! பெண்கள் என்றாலே பூப்போன்றவர்கள் என்றாகி விட்டது. அவர்களின் கைகளும் மிருதுவானதாக இருப்பது நல்லது.
பெண்களின் கைகள் இயற்கையில் மென்மையானவை. வீட்டு வேலை, வாகனம் ஓட்டுவது, விரல் ஒடிய கீபோர்டில் தட்டுவது போன்ற இயக்கங்களால், அவர்களின் கைகள் சொரசொரப்பாகவும், கடினமாகவும் மாறி விடுகின்றன.
சமயங்களில் காய்த்துப்போவதும் உண்டு. கைகள் சொரசொரப்பாக இருப்பதனால், கைகள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. கைகளால் முகத்தைத் தேய்த்துக் கழுவும்போது, கண்களுக்குத் தெரியாத மெல்லிய கோடுகள் முகத்தில் உருவாகும். இதனால் நாளடைவில் முகம் தொய்வடையக்கூடும். எனவே, விரல்களின் மென்மையை காக்க வேண்டியது அவசியம்.
தினமும் இரவு ஒரு பாத்திரத்தில், கைபொறுக்கும் சூட்டில் தண்ணீர் எடுத்துக்கொள்ளவும். அதில் ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய், ஒரு ஸ்பூன் கிளிசரின், ஒரு ஸ்பூன் எப்சம் உப்பு (மெக்னீசியம் சல்பேட்) சேர்த்து, தண்ணீர் நன்கு ஆறும்வரை கைகளை அதில் மூழ்கும்படி
வைத்திருக்கவும். இதனால் கைகள் மென்மையாவதுடன், கை வலி நீங்கி ரிலாக்ஸ் ஆகும்.
பின்னர் கைகளைத் துடைத்துவிட்டு, அரை ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் அரை ஸ்பூன் தேன் எடுத்து தேய்த்துக்கொண்டு, கைகளை சர்க்கரையில் புரட்டவும். கை முழுவதும் சர்க்கரை ஒட்டிக்கொள்ளும். இப்போது இரண்டு கைகளையும் நன்கு சூடுபறக்கும் வரை தேய்க்கவும். இதனால் சர்க்கரை கரையும்.
சர்க்கரையில் கிளைகாலிக் ஆசிட் இருப்பதால், இது கைகளில் உள்ள இறந்த செல்களை நீக்குவதுடன், சுருக்கங்களைப் போக்கி மலர்ச்சியாக்கும்.
கைகள் காய்த்துப்போக ஆரம்பிக்கும், காலகட்டத்திலேயே தினசரி இந்த சிகிச்சையைத் தொடர்ந்தால், மென்மை மீட்கப்படுவதுடன், தொடர்ந்து மிருதுவாக இருக்கும்.
