sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

புதுப்புது அர்த்தங்கள்: மவுனம் அழகல்ல!

/

புதுப்புது அர்த்தங்கள்: மவுனம் அழகல்ல!

புதுப்புது அர்த்தங்கள்: மவுனம் அழகல்ல!

புதுப்புது அர்த்தங்கள்: மவுனம் அழகல்ல!


PUBLISHED ON : ஜன 28, 2015

Google News

PUBLISHED ON : ஜன 28, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உணர்வுகள், எண்ணங்கள் மற்றும் அறிவுத் திறனை வெளிப்படுத்த, மொழி அவசியம். உயிரினங்கள், இவற்றை பலவிதமான உடல்மொழிகளில் வெளிப்படுத்தினாலும், பரிணாம வளர்ச்சியில், நாம் ஒலியை வெளிப்படுத்தியது மிக முக்கியமான நிகழ்வு! வலி மற்றும் சந்தோஷ உணர்வுகளை வெளிப்படுத்த, இத்தகைய ஒலி மிகவும் அவசியம். இந்த ஒலியை வகைப்படுத்தியது தான் மொழி!

மொழி கலந்த பேச்சின் மூலம், பேசுபவருக்கு சாதகமோ, பாதகமோ ஏற்படலாம். ஒருவேளை, பாதகம் ஏற்பட்டால்...? அதனால் தான், 'நிலையில்லாத தருணங்களில் பேசாமல் இருப்பது உத்தமம்' என்று அறிவுறுத்தப்படுகிறது. ஆனால், பேசாமல் இருப்பதும், பலவிதமான அர்த்தங்களை வெளிப்படுத்தும். காரணம்... கோபம், வெறுப்பு, குரோதம் மற்றும் பகைமையின் குறியீடாகவும், மவுனம் பார்க்கப்படுகிறது.

மவுனமாக இருப்பது என்பது அறியாமை அல்லது வெறுப்பின் அடையாளம்; ஆனால், அமைதி என்பது அடக்கத்தின் அடையாளம்! அமைதியாக இருப்பதற்கு மவுனம் தேவை. ஆனால், மவுனமாக இருப்பது, அமைதியைக் கொடுக்கும் என்பதற்கு உத்தரவாதமில்லை.

சொல்ல வேண்டியதை, சொல்ல வேண்டிய தருணத்தில், சொல்ல வேண்டிய அளவு சொல்ல கற்றுக் கொள்ள வேண்டும். அப்படி இல்லாமல், சங்கடங்களைத் தவிர்க்க, அதிலிருந்து தப்பிக்க மவுனம் சாதிப்பது அழகல்ல!'silence is the biggest violence' என்று கூறுவர். எனவே, அமைதி காப்பது அழகான விஷயம். ஆனால், மவுனம் காப்பது முற்றிலும் அழகல்ல; அது பயங்கரமானது!

மருத்துவ சந்தேகங்களுக்கு: 94440 34647ச

- மா.திருநாவுக்கரசு, மனநல மருத்துவர்.






      Dinamalar
      Follow us