தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கோடைக்கு சர்பத் ரெடி

கோடைக்கு சர்பத் ரெடி

கோடைக்கு சர்பத் ரெடி


PUBLISHED ON : மார் 23, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 23, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோடை வெயில் முன்கூட்டியே கொளுத்தத் துவங்கி விட்டதால், நாமும் அதை எதிர்கொள்ள தயாராகலாம். தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும் என்று, நாமாகவே ஒரு நாளைக்கு, 2 முதல், 3 லிட்டர் என்று அளவை நிர்ணயித்து குடிக்கிறோம். இது தவறான பழக்கம். உடம்பிற்கு எப்போது தண்ணீர் தேவையோ, அப்போது உடம்பு தானாகவே, சில அறிகுறிகளை காட்டும். அந்த சமயங்களில், தாகம் தீரும் வரை தண்ணீர் குடித்தால் போதுமானது. பாட்டில்களில் அடைக்கப்பட்ட, 'கார்பனேட்டட்' திரவங்களை தவிர்த்து, ஆரோக்கியமான சர்பத்தை, வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளலாம்.நன்னாரி வேரை இரவு முழுவதும் வெந்நீரில் ஊற வைத்து, காலையில்

அந்த நீரை மீண்டும், 10 முதல் 15 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். இறக்குவதற்கு முன் ஏலக்காய் தட்டிப் போட்டு, ஆற வைக்க வேண்டும். பின் தேவையான அளவு நாட்டுச் சர்க்கரையை எடுத்து, பாகு காய்ச்சி, அதை தனியாக ஆற வைத்து, சுத்தமான உலர்ந்த

பாட்டிலில் வைத்துக் கொள்ளுங்கள்.ஒரு நாளில் இரண்டு முறை நன்னாரி சாறையும், சர்க்கரை பாகையும் கலந்து குளிர்ந்த நீர் சேர்த்துக் குடிக்கலாம்.

டாக்டர் ரேச்சல் ரெபேக்கா பிலிப்

ஆயுர்வேத சிறப்பு மருத்துவர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us