தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/குழந்தைகளை மதிப்பிடும் மதிப்பெண்

குழந்தைகளை மதிப்பிடும் மதிப்பெண்

குழந்தைகளை மதிப்பிடும் மதிப்பெண்


PUBLISHED ON : அக் 21, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 21, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* முதல் மதிப்பெண் மட்டும் வாழ்க்கைக்கு உதவுமா?

எப்போதும் முதல் மதிப்பெண், முதல் ரேங்க் எடுப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி நம் குழந்தைகளை வழிநடத்தி செல்கிறோம். பள்ளி, கல்லூரிகளில் மதிப்பெண்ணை வைத்தே தரவரிசை பிரிக்கப்பட்டு அதற்கேற்ப வேலை வாய்ப்பு அமைகிறது.

இதனால் குழந்தைகளை உயர்ந்த மதிப்பெண் எடுக்கவே ஆசிரியர்கள் பயிற்சி அளிக்கின்றனர். அவ்வாறு பயிற்சி அளிக்கும் குழந்தைகளுக்கு மனப்பாடம் செய்யும் பழக்கம் மட்டுமே அதிகம் இருக்கும். வாழ்நாள் முழுவதும் படிப்பால் இருக்கும் ஆர்வமும் குறைவாகவே இருக்கும். எனவே தேர்வு முடிந்தபின் படித்தவை மறந்து போகும்.

* முதல் ரேங்க் எடுக்கும் குழந்தைகளின் மன வலிமை எவ்வாறு இருக்கும்?

முதல் 3 இடங்களை எடுக்கும் குழந்தைகளிடம் எளிதில் தோல்வியை ஏற்கும் மனப்பான்மை இருக்காது. முதல் மதிப்பெண் எடுக்க வேண்டுமென்று வற்புறுத்துவதால் குழந்தைகள் மன அழுத்தத்திற்கு அளாகின்றன. தான் மட்டுமே படிக்க வேண்டும். முதல் ரேங்க் எடுக்க வேண்டும், என்ற எண்ணம் கொண்டு சுயநலமாகவே இருப்பர். அவ்வாறு இருக்கும் குழந்தை மற்றவர்களுடன் இணைந்து படிக்க மாட்டார்கள்.

அனைத்து விஷயங்களிலும் அக்குழந்தைக்கு தனித்தே இருப்பதால் மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து படிப்பது மற்றும் மற்றவர்களுடன் கூட்டு முயற்சியில் ஈடுபடாமல் இருப்பது போன்றவை இருக்கும்.

* பெற்றோர், ஆசிரியர்கள் குழந்தைகளை எவ்வாறு ஊக்குவிப்பது

ஒரு பாடத்தை படிக்கும்போது அதை உணர்ந்து படித்து, புரிந்து படிக்க வேண்டும். முதல் ரேங்க் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் புரியாத படத்தை மனப்பாடம் செய்யும் குழந்தை, பாட அர்த்தங்கள்யாவும் புரியாமல் போகும். அது மதிப்பெண் எடுத்தவுடன் பிற்கால வாழ்க்கைக்கு உதவாமல் போகும். எந்த குழந்தை பாடத்தை விரும்பி, புரிந்து கதையாக படிக்கிறதோ, அக்குழந்தையின் மனதில் அப்பாடம் ஆழ்ந்து பதிந்து பிற்கால வாழ்க்கைக்கு உதவும்.

* சாதனையாளர்கள் எவ்வாறு வெற்றியை அடைகின்றனர்?

பெரும்பாலும் முதல் ரேங்க் எடுப்பவர்களின் மனப்பான்மை சிறந்து விளங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதால் வேலை பார்க்கும் இடங்களில் தலைகனத்துடன் செயல்படுவதால் கூட்டு முயற்சியில் ஈடுபடும் எண்ணமும் மிகக் குறைவாகவே இருக்கும்.

தன்னோட தனித்துவ திறமைகளை கூட்டு முயற்சியில் ஈடுபடுத்தி செயல்பட்டால் மட்டுமே வேலை பார்க்கும் இடங்களிலும் மற்ற இடங்களிலும் சிறந்த சாதனையாளர்களாக விளங்க முடியும். இதுவே சாதனைக்கான முதற்படி.



- டாக்டர் பிரசன்ன கார்த்தி

குழந்தைகள் நல நிபுணர், மதுரை

96299 02323


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us