தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/தடுப்பூசி பெரியவர்களுக்கு போடலாமா

தடுப்பூசி பெரியவர்களுக்கு போடலாமா

தடுப்பூசி பெரியவர்களுக்கு போடலாமா


PUBLISHED ON : அக் 21, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 21, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* தடுப்பூசி குழந்தைகளுக்கு மட்டும் போட வேண்டுமா? பெரியவர்களுக்கும் போடலாமா?

பெரியவர்களுக்கும் தடுப்பூசி போடலாம். நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் உள்ளவர்கள் (COPD, ILD), சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் 'Neumocoe Vaccina' என்ற தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம்.

மேலும் மழைக்காலத்தில் பன்றி காய்ச்சல் என்ற நோய் பரவி வருகிறது. இதற்கு Flu Vaccina என்ற தடுப்பூசியை போட்டுக் கொள்வது நல்லது. இதை ஆண்டுக்கு ஒருமுறை போட்டு கொள்ளவது அவசியம். இந்த தடுப்பூசியை சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை போட்டுக் கொள்ளலாம்.

* MONTOUX TEST என்றால் என்ன?

MONTOUX TEST என்பது நம் உடலில் காச நோய் தொற்று உள்ளதா என்பதை கண்டறிய உதவும் ஒரு பரிசோதனை. இதற்கான ஊசியை செலுத்தி 48 மணி நேரம் கழித்து, அந்த இடத்தில் ஏதேனும் மாற்றங்கள் உள்ளதா, என பார்க்க வேண்டும்.

இது குழந்தைகளுக்கு பத்து mm அளவும், பெரியோருக்கு 15 mm அளவுக்கு மேல் இருந்தால், அது காசநோய் தொற்று உள்ளதற்கான அறிகுறி ஆகும். உடனே சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* COPD என்ற நோய் உள்ளவர்கள் எந்த வகையான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்?

சத்தான உணவை உட்கொள்வதன் மூலம் உடலுக்க தேவையான வலிமையும், நோய் எதிர்ப்பு சக்தியும் கூடும். உதாரணமாக பழங்கள், காய்கறிகள், தயிர், பாலாடைக்கட்டி, பால் உணவு பொருட்கள், பருப்பு வகைகள், தானியங்கள், உயர்ந்த வகை புரதப் பொருட்களை உட்கொள்ளலாம். சரியான அளவில் உப்பை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். வாயு சம்பந்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நலம். நாம் உண்ணும் உணவை சரியான அளவில், சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். உணவு உண்ட பின் சிறிது தூரம் நடக்க வேண்டும். இதனால் உணவு செரிமானம் சீராக இருக்கும்.

* நான் ஆழ்துளை கிணறு அமைக்கும் தொழிலில் பத்து ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறேன். கடந்த சில் நாட்களாக மூச்சு விடுவதில் சிரமம் உள்ளது. இது எதனால்?

ஆழ்துளை கிணறு அமைக்கு நேரத்தில், கல் உடைக்கும் போது தூசி காற்றில் சிலிக்கா என்ற துகள் கலந்திருக்கும். அந்த துகள் நாம் மூச்சு விடும் போது மூச்சு காற்றில் கலந்து நுரையீரலுக்குள் சென்று நுரையீரலில் சிலிக்கோலஸ் எனும் நோயை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. இந்நோய் உள்ளதா என்பதை எக்ஸ்ரே பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம். பரிசோதனைக்கு பின் நோய் உள்ளதா என உறுதி செய்த பின் அதற்குண்டான சிகிச்சையை எடுத்துக் கொள்ளவதோடு, ஆழ்துளை கிணறு அமைக்கும் தொழிலை விட்டு விட வேண்டும்.



- டாக்டர் மா. பழனியப்பன்,

நுரையீரல் சிறப்பு நிபுணர், மதுரை

97919 19507


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us