தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/தோள் மூட்டு வலிக்கு விடியல் உண்டு

தோள் மூட்டு வலிக்கு விடியல் உண்டு

தோள் மூட்டு வலிக்கு விடியல் உண்டு


PUBLISHED ON : நவ 17, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 17, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

52 வயதாகும் நான் ஆசிரியராக உள்ளேன். 6 மாதங்களாக தோள்பட்டை வலியால் அவதிப்படுகிறேன். கையை உயர்த்தி போர்டில் எழுத முடியவில்லை. இரு வாரங்களுக்கு முன்பு தோள்மூட்டு நுண்துளை சிகிச்சை செய்தேன். இப்போது வலி இல்லை மூட்டின் அசைவும் நன்றாக உள்ளது. போர்டில் எழுத துவங்கினால் மீ்ண்டும் வலி ஏற்படுமோ என்ற பயம் உள்ளது?

முறையாக நுண்துளை சிகிச்சை மேற்கொண்டிருந்தால் தோள் மூட்டில் இனி வலி ஏற்படாது. 6 முதல் 10 வாரங்களில் போர்டில் எழுதுவது உட்பட அனைத்து வேலைகளும் வலியின்றி மேற்கொள்ள முடியும்.

எனக்கு 40 வயதாகிறது. ஆறு மாதங்களுக்கு முன் என் கையை உயர்த்தி கம்பியை பிடித்தபடி பஸ்சில் பயணம் செய்தேன். திடீரென பிரேக் போட்டதில் தோள் மூட்டு பிடித்துக் கொண்டது. அன்று முதல் தோள் மூட்டில் வலி தாங்க முடியவில்லை பல டாக்டர்களை சந்தித்தும் பலன் இல்லை. இரு மாதம் பிஸியோதெரபி மேற்கொண்டேன். வலி நீங்கவில்லை. தோள்மூட்டிற்கு எம்.ஆர்.ஐ., எடுத்ததில் ANTERIOR LABRAL TEAR பாதிப்பு உள்ளதாக கூறினர். இதற்கு சிகிச்சை உண்டா?

ANTERIOR LABRAL TEAR என்பது தோள்மூட்டின் கிண்ணம் பகுதியில் உள்ள விளிம்பின் குருத்தெலும்பில் கிழிவதை குறிக்கும். பொதுவாக இது தோள்மூட்டு விலகுபவர்களுக்கு சகஜமாக ஏற்படும். உங்களுக்கு ஏற்பட்ட காயத்தின் தீவிரம் தோள்மூட்டு விலகுவதற்கு இணையானதாகும். இதனால் நீங்கள் 6 மாதங்கள் ஆகியும் வலியுடன் இருக்கிறீர்கள். தோள்மூட்டு நுண்துளை சிகிச்சையில் கிழிந்த குருத்தெலும்பை சீரமைத்தால் உங்கள் வலி நீங்கும். இதை நீங்கள் அடிபட்ட உடன் தோள் மூட்டு நுண்துளை டாக்டரிடம் ஆலோசித்திருந்தால் அவதிப்படுவதை அப்போதே தவிர்த்திருக்கலாம்.

என் வயது 63. எனக்கு இடுப்பு மூட்டு எலும்பு முறிந்ததால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதில் தொடை எலும்பின் தலை பகுதி மட்டும் எடுக்கப்பட்டது. இப்போது வலி இல்லை. ஆனால் காலின் நீளம் குறைபாடு, இடுப்பு மூட்டின் அசைவு குறைபாடு உள்ளது. மாற்று சிகிச்சை உண்டா?

இச்சிகிச்சை குறிப்பிட்ட சில பிரச்னைகள் உள்ள நோயாளிகளுக்கு மட்டுமே மேற்கொள்ளப்படும். சில நேரம் கிருமிகள் இருந்தாலும் செய்திருக்கலாம். அடிப்படை காரணத்தை அறிந்து கொள்வது அவசியம். அதற்கு தீர்வு கண்ட பின் மாற்று சிகிச்சை செய்தால் நன்றாக நடக்க முடியும். மூட்டை அசைக்கவும் முடியும். 85 சதவீதத்திற்கு மேல் வெற்றி சாத்தியம்.

- டாக்டர் கே.என். சுப்பிரமணியன்,

எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர்.

மதுரை

93442 46436


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us