PUBLISHED ON : மே 29, 2022

தாய் - தந்தை இருவரிடம் இருந்தும் தலா, 23 குரோமோசோம்கள் குழந்தைக்கு வருகிறது.
இதில், 21வது குரோமோசோமில் ஏதாவது கோளாறு இருந்தால், 'டவுன் சிண்ட்ரோம்' எனப்படும் மரபியல் கோளாறுடன் குழந்தைகள் பிறக்கும். இவர்கள் உடல், மனக்கோளாறுடன் இருப்பர். 700 - 800 குழந்தைகளில் ஒரு குழந்தை இதுபோன்ற குறைபாடுடன் பிறக்கிறது.
கர்ப்பம் தரித்த முதல் மூன்று மாதத்தில், ரத்தப் பரிசோதனையும், என்.ஐ.பி.டி., எனப்படும் ஸ்கேன் பரிசோதனையும் செய்தால், கர்ப்பத்தில் உள்ள கரு, டவுன் சிண்ட்ரோம் குறையுடன் பிறக்க வாய்ப்புகள் உள்ளதா என்பதை, 99.9 சதவீதம் துல்லியமாக அறிய முடியும்.
ஏற்கனவே, மரபியல் கோளாறு குடும்பத்தில் இருந்தால், இந்த பிரத்யேக ரத்த மற்றும் ஸ்கேன் பரிசோதனையை செய்வது நல்லது.
கர்ப்பத்திற்கு திட்டமிடுவதற்கு மூன்று மாதங்கள் முன்பே, தினமும் ஒரு போலிக் ஆசிட் மாத்திரை சாப்பிட்டு வந்தால், பிறக்கும் குழந்தைக்கு, மூளை, முதுகுத் தண்டு தொடர்பான பிரச்னைகள் இல்லாமல் இருக்கும்.
- கிரீன் ஜேர்னல்
