தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/பகலில் தூக்கம் வரும்; இரவில் வரவில்லையா?

பகலில் தூக்கம் வரும்; இரவில் வரவில்லையா?

பகலில் தூக்கம் வரும்; இரவில் வரவில்லையா?


PUBLISHED ON : ஜூன் 12, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 12, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெண்களை பிரத்யேகமாக பாதிக்கும் கோளாறு லுாபஸ். ஆண்களுக்கு அரிதாகவே வரும்; அதே நேரத்தில், பெண்களை விடவும் மோசமான பாதிப்புகளை லுாபஸ் ஏற்படுத்தும்.

இந்தக் கோளாறு இருப்பதே பலருக்கும் தெரிவதில்லை. முடி உதிர்வது, வாயின் மேல் அண்ணத்தில் புண் வருவது, வெயிலில் போனால் தோல் மற்றும் முகம் சிவந்து போவது, கன்னத்தில் வண்ணத்துப் பூச்சி போன்ற தடிப்பு இவையெல்லாம், லுாபஸ் பாதிப்பின் அறிகுறிகள். இளம் பெண்களுக்கு மூட்டு வலி வரலாம்.

'ரூமட்டாய்டு ஆர்தரைடீஸ்' 40 வயதிற்கு மேல் தான் வரும். ஆனால் லுாபஸ், 4 வயது குழந்தையில் இருந்து யாருக்கும் வரலாம். மிக அதிகமாக பாதிப்பது, 20 - 40 வயதிற்குள் தான். தமிழில் இதற்கு, 'செஞ்சரும பல்லுறுப்பு சிதைவு நோய்' என்று சொல்வோம். பெயரிலேயே புரிந்து இருக்கும். சர்க்கரை கோளாறு போன்று, எல்லா உறுப்பையும் பாதிக்கும்.

சர்க்கரை கோளாறில், நீண்ட நாட்கள் கழித்தே சிறுநீரகங்கள் பாதிக்கப்படும். ஆனால், இதில் முதலில் பாதிக்கப்படுவதே சிறுநீரகங்கள் தான். சில பெண்களுக்கு வலிப்பு வரலாம்; மனநல பாதிப்பு வரலாம்; மனக்குழப்பங்கள் வரும். பகலில் துாக்கம் வரும்; இரவில் வராது. நரம்பியல் கோளாறுடன் மன நல பாதிப்பு வரலாம். உடலில் நெறி கட்டும். காய்ச்சல் விட்டு விட்டு வரலாம்.

காரணிகள்மரபியல், சுற்றுச்சூழல் இரண்டும் தான் இதற்கு பிரதான காரணங்கள். லுாபஸ் வரும் வாய்ப்பு இருந்தால், சூரிய ஒளி தோலில் படும்போது, அதிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களால், சில வேதியியல் மாற்றங்களை ஏற்படுத்தி, எதிர்ப்பு செல்கள் உருவாகும்.

அவை, நம்முடைய உடல் செல்களையே அழிக்கத் துவங்குகிறது. லுாபஸ் பாதிப்பின் தன்மை நபருக்கு நபர் மாறுபடும். சிலருக்கு கண் பார்வை கூட பறிபோகலாம்.

மாதவிடாய் நின்ற பின், 'ஈஸ்ட்ரோஜென்' சுரப்பு குறைவாக இருப்பதால், இந்த பாதிப்பு வருவதில்லை. முறையான பரிசோதனை செய்து, லுாபஸ் என்று உறுதி செய்த பின், தொடர்ந்து மருந்து சாப்பிட்டால், இதை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.

முழுமையாக கட்டுக்குள் இருக்கிறது என்று மருந்தை நிறுத்தினால், சில ஆண்டுகள் கழித்து மீண்டும் வரலாம். கோளாறு இருப்பவர்கள், காலை 9:00 மணிக்கு மேல், மாலை 4:00 மணி வரை வெயிலில் போகக் கூடாது. டேபிள் விளக்கு, டியூப் லைட், மொபைல் போன், எல்.இ.டி., விளக்கு போன்ற, புற ஊதாக் கதிர்கள் வருபவற்றை தோலில் படும் விதமாக பயன்படுத்தக்கூடாது.

இது போன்ற விளக்கு வெளிச்சத்தின் கீழ் நேராக இருப்பதை தவிர்க்க வேண்டும். நேரடியாக லைட் தோலில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மருந்து சாப்பிட்டு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும் போது, கர்ப்பம் தரிக்கலாம்; பாதிப்பு இல்லாமல் குழந்தை பெற முடியும்.

டாக்டர் தமிழ்செல்வன்,

மூட்டு, முடக்கவியல் மருத்துவர்,

சென்னை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us