தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/உயிர் காக்கும் திரவம்!

உயிர் காக்கும் திரவம்!

உயிர் காக்கும் திரவம்!


PUBLISHED ON : ஜூன் 12, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 12, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடந்த சில ஆண்டுகளாக, வைரஸ் தொற்று எல்லா காலங்களிலும் வருகிறது; மழைக் காலத்தில் அதிகமாக பரவுகிறது. அதிக பாதிப்பை ஏற்படுத்தாத ஜலதோஷம், காய்ச்சலாக, 90 சதவீத குழந்தைகளை இது பாதிக்கிறது. அதே நேரத்தில், வேகமாகத் தொற்றக் கூடிய வைரஸ் பாதிப்பு இது.

தும்மலில் ஆரம்பித்து, தொண்டை வலி, இருமல், உடல் வலி இருக்கும். இரண்டு, மூன்று நாட்களில் சரியாகி விடும். பெரிதாக சிகிச்சை தேவைப்படாது; பாராசிட்டமால் மருந்தே போதுமானது.

ஓ.ஆர்.எஸ்., எனப்படும் இந்த திரவம் மிகப் பெரிய கண்டுபிடிப்பு. கடந்த 50 ஆண்டில், 40 கோடி மக்களின் உயிரை காப்பாற்றி உள்ளது. வயிற்றுப் போக்கு ஏற்பட்டால், குடலில் இருந்து நீர் மழை போல கொட்ட ஆரம்பித்து, வெளியே வரும். உடலின் நீர்ச்சத்து 'மளமள'வென்று குறைய ஆரம்பிக்கும்.

காலரா போன்ற தொற்று ஏற்படும் போது, இதனால் தான் உயிரிழப்பு அதிகம் ஏற்படுகிறது. உலக சுகாதார மையம் சிபாரிசு செய்த உப்பு, சர்க்கரை கரைசலை நீரில் கரைத்து, உடலின் நீர்ச்சத்தை சமன் செய்ய, 15 நிமிடத்திற்கு ஒரு முறை, இரண்டு ஸ்பூன் கொடுக்கலாம். எவ்வளவு மோசமான வயிற்றுப் போக்காக இருந்தாலும், இத்திரவம் உயிரைக் காப்பாற்றி விடும்.

டாக்டர் எஸ்.தங்கவேலு,

குழந்தைகள் நல மருத்துவர்,

சென்னை


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us