தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/நலம்/புகை பிடிப்பதால் சுவை குறையும்

புகை பிடிப்பதால் சுவை குறையும்

புகை பிடிப்பதால் சுவை குறையும்


PUBLISHED ON : டிச 18, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 18, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எனக்கு சமீபகாலமாக சுவை தெரியவில்லை. 10 ஆண்டாக புகைபிடிப்பது ஒரு காரணமாக இருக்குமா?

புகை பிடிக்கும் பழக்கம் நீண்டநாள் இருப்பவருக்கு, பல்வேறு தொந்தரவு இருக்க வாய்ப்புள்ளது. இதில் நீங்கள் கூறுவதும் ஒன்று. புகைபிடிப்பவருக்கு உமிழ்நீர் சுரக்கும் தன்மை குறைந்து பற்சொத்தை அதிகரிக்கக் கூடும். நாக்கில் இருக்கும் சுவை அறியும் விசேஷ அணுக்கள் பாதிக்கப்பட்டு, சுவை அறியும் தன்மை குறையும். பற்களின் மேல் கறை படியத் துவங்கும். இது நீண்டநாள் இருந்தால், பல்லினுள் ஊடுருவி செல்லக் கூடும். இவ்வாறு ஆன கறைகளை எளிதில் சரிசெய்ய முடியாது. மேல் அண்ணத்தில் சிறு சிவப்பு புள்ளிகள் தோன்றக் கூடும். அதேபோல கன்னத்தில் உட்புறமும், நாக்கிலும் வெள்ளை கோடுகளோ, வெள்ளைப் படிவங்களோ தோன்றக் கூடும். இவற்றை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் புற்றுநோயாக மாறக் கூடும். இதைத் தவிர புகைபிடிப்பதால் வாய் மட்டுமின்றி, நுரையீரல், தொண்டை போன்ற பகுதியில் புற்றுநோய், சுவாச கோளாறு வரக்கூடும். எனவே புகைபிடிக்கும் பழக்கத்தை தவிர்ப்பதே பற்கள் மற்றும் வாய்ப்பகுதி மட்டுமின்றி உடல் நலத்திற்கு நல்லது.

* நாற்பது வயதாகும் எனக்கு, சிலநேரங்களில் முகத்தில் மின்னல் அடிப்பதுபோல வலி ஏற்படுகிறது. இது சிலநேரம் கழுவும்போதோ, துடைக்கும்போதோ கூட வந்துவிடுகிறது. இது எதனால் ஏற்படுகிறது?

நீங்கள் குறிப்பிடும் வலியின் தன்மையும், வயதையும் வைத்து பார்த்தால், இது ட்ரை ஜெர்மனல் நியூராலாஜியா என்ற நரம்பில் இருந்து ஏற்படும் வலியாக இருக்கலாம். நீங்கள் பல் டாக்டரை அணுகி, இந்த வலி பல்லினால் ஏற்படுகிறதா அல்லது நரம்பால் ஏற்படுகிறதா என அறிய வேண்டும். இவ்வாறு நரம்பில் இருந்து ஏற்படும் வலி, பெரும்பாலும் முதுமையான பெண்களுக்கு வரக்கூடும். இதற்கு தகுந்த சிகிச்சை செய்து கொண்டால் வலியின் தன்மையும், வீரியத்தையும் குறைத்துக் கொள்ள முடியும்.

* எங்கள் குடும்பத்தில் சில பெரியவர்களுக்கு தாடை நீளமாகவும், பற்கள் கோணல் மாணலாகவும் இருக்கிறது. இது எங்கள் குழந்தைகளை பாதிக்குமா? இவ்வாறு ஏற்படுமானால் அதை எப்படி தவிர்ப்பது?

சிலருக்கு பல் வரிசையும் தாடை வளர்ச்சியும் குடும்பத்தில் பரம்பரையாக மரபணுக்கள் மூலம் வரக்கூடும். தாடையை பொருத்தவரை, கீழ்த்தாடை அல்லது மேல்தாடை சிறியதாகவோ, பெரியதாகவோ, சில பரம்பரைகளில் வரலாம். இதேபோல பற்களுக்கு இடையே இடைவெளி வருவது பற்கள் ஒன்றின் மீது ஒன்றாக இருப்பது, சிங்கப் பற்கள் தூக்கிக் கொண்டு இருப்பது, சில குடும்பங்களில் பரம்பரையாக வரக்கூடும். இவ்வாறு தோன்றும் பற்கள் மற்றும் தாடை குறைபாடுகளை தகுந்த வயதில் சிகிச்சை அளித்தால் இப் பிரச்னையை சரிசெய்யக் கூடும். ஆகவே குழந்தைகளுக்கு 6 வயது ஆகும்போதே, பல்சீரமைப்பு

நிபுணரிடம் ஆலோசனை செய்து, அதன்படி நடந்து கொண்டால் பிரச்னைகளை சரிசெய்யலாம்.

- டாக்டர் எஸ்.முத்துராமன்,

மதுரை. 94430 61160

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us