PUBLISHED ON : டிச 26, 2021

நொறுக்குத் தீனி சாப்பிட வேண்டும் போல தோன்றினால் பாப்கார்ன், அவல், பொரி, பொட்டுக்கடலை, மைக்ரோவேவ் அடுப்பில் பொரித்த வற்றல், வடாம் போன்றவற்றை சாப்பிடலாம். இது நொறுக்குத் தீனி சாப்பிட்ட திருப்தியை தரும்; உடல் எடையும் ஏறாது.
'ஜிம்'மில் உடற்பயிற்சி செய்வது முழுமையான பலன் தராது. எடை குறைவது போல குறைந்து மீண்டும் ஏறிவிடும். அதிலும், ஜிம் செல்வதை இடையில் நிறுத்திவிட்டால், முன்பை காட்டிலும் அதிக உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இதற்கு பதிலாக, வீட்டிலேயே நன்றாக வேலை செய்ய வேண்டும். அப்படி செய்யும் போது, திட உணவுகளை தவிர்த்து, கஞ்சி, பழச்சாறு போன்றவற்றை உணவு இடைவேளையில் குடிக்கலாம்.
இடுப்பு சுற்றளவு, பெண்களுக்கு 80 செ.மீ., ஆண்களுக்கு 90 செ.மீ., சராசரியாக இருக்க வேண்டும். உடல் எடையும் உயரத்திற்கு ஏற்ப இருக்க வேண்டும்.
-ஆதாரம்: தி நேச்சர்
