தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/ஜவ்வரிசியில் இத்தனையா...!

ஜவ்வரிசியில் இத்தனையா...!

ஜவ்வரிசியில் இத்தனையா...!


PUBLISHED ON : நவ 12, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 12, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வடநாட்டில், ஜவ்வரிசியில் பல உணவு வகைகள் தயாரிக்கப்படுகின்றன. ஜவ்வரிசியில் செய்யப்பட்ட உணவை, காலையில் எடுத்துக்கொண்டால், நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம். இதில், கார்போஹைட்ரேட் சத்து அதிகமுள்ளதால், உடல் ஆரோக்கியத்துக்கு பலம் சேர்க்கிறது.

பல்வேறு உபாதைகளுக்கு தீர்வு கிடைக்கிறது. குறிப்பாக, வயிற்று பொருமல் தீரும். தயாரிக்கும் உணவுகள் கொஞ்சம் கெட்டியாக இருப்பதற்காக ஜவ்வரிசி சேர்க்கப்பட்டாலும், செரிமானத்துக்கு ஏற்றதாக இருக்கும்.

சில உணவுகள், நம் குழந்தைகளுக்கு செரிமான கோளாறு மற்றும் நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். அப்போது, ஜவ்வரிசி யை, பால் அல்லது நீரில் சேர்த்துகொதிக்க வைத்து, அந்த கஞ்சியில், சர்க்கரை அல்லது உப்பு குழந்தைகளுக்கு கொடுத்தால், செரிமான பிரச்னைகள் தீரும்.

ஜவ்வரிசியை நன்றாக வேக வைத்து கடைந்து, மோர் தயாரிக்கலாம். அந்த மோரில், உப்பு போட்டு அருந்தினால், வயிற்று பொருமல் நீங்கும். திடீரென ஏற்படும் நோய்களுக்கு, சிறந்த நிவாரணியாக செயல்படுகிறது.

ஒரே வாரத்தில் ஒல்லியாக இருக்கும் தேகம், இயற்கையான முறையில் எடையை அதிகரிக்க செய்ய வேண்டும் என்று நினைத்தால், அதற்கு மிகச்சிறந்த தேர்வு ஜவ்வரிசி தான்.

நேரத்துக்கு சாப்பிட முடியாமல் இருப்பவர்கள், ஜவ்வரிசியை சிறிது சாப்பிட்டால் போதும். நேரத்துக்கு முறையாக பசிக்க ஆரம்பிக்கும்.

நேரத்துக்கு சரியாக ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொண்டாலே இயற்கையாகவே எடை கூடும். எலும்புகளை ஆரோக்கியமாக்கும். உடற்பயிற்சிக்கு முன், பின் என எப்போதும் இதை உட்கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us