PUBLISHED ON : டிச 20, 2015
இந்தியாவை பொறுத்தவரை குழந்தைகள் பெரும்பாலும் தங்களின் பெற்றோர்களுடன் தான் படுத்து உறங்குகின்றனர். பெற்றோர்களும் அவர்களை தனி அறையில் படுக்க அனுமதில்லை. அதற்கு குழந்தைகளுக்கு போதிய விபரம் இல்லை, பயப்படுவார்கள் என்ற அச்சம் பெற்றோர்களுக்கு இருப்பதே காரணமாகும். 
ஆண் குழந்தைகள் டீன் ஏஜ் பருவத்தை கடந்த பிறகுதான், தனியாக உறங்குவதை விரும்புகின்றனர். பெண்கள் திருமணம் ஆகும் வரை அம்மாவுடன் படுப்பதை விரும்புகின்றனர். ஆனால், மற்ற நாட்டவர்களிடம் இப்பழகம் முற்றிலும் வேராக இருக்கிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் ஐந்து வயதில் இருந்தே தனி அறையில் படுக்க வைக்கப்படுகின்றனர். 
இதற்கு காரணம், குழந்தைகள் தைரியமுள்ளவர்களாகவும் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளக் கூடியவர்களாகவும் வளர்க்க வேண்டியதும் அவசியம் என அவர்கள் கருதுவதுதான். குழந்தைகள் தனி பெட் ரூமில் தங்குவதால் அவர்களால் சுயமாக செயல்படக்கூடிய மனோநிலை ஏற்படும். சுதந்திரமாக இருக்கும் உணர்வை பெறுகின்றனர்., வெளியில் எங்கு சென்றாலும் அவர்களுக்கு எதையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவம் ஏற்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது அதே நேரத்தில் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் அதிகமான சுதந்திரம் தவறான பழக்க வழக்கங்களுக்கு காரணமாகவும் அமைகிறது. குழந்தைகள் சிறுவயதில் தவறான செயல்களை செய்வதை வெளி நாட்டினர்கள் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. 
ஆனால், இந்திய பொற்றோகள் தங்களின் குடும்பத்தை மட்டுமல்ல நாட்டின் ஒட்டு மொத்த பண்பாடு கலாசாரத்தை பாதிக்கபடுதாக கருதுகின்றனர். அதனால், இந்திய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தனியாக இருக்க அனுமதிப்பதில்லை. 
இன்றை நவீன காலத்தில், தனி அறையில் படுத்து பழகுவது, ஒரு வகையில் தன்னம்பிக்கையை தரும் என்பது உண்மைதான். பெற்றோர்களை பிரிந்து பள்ளி கல்லூரிகளில் விடுதியில் தங்கி இருக்கும் போது, இந்த பழக்கம் தைரியத்தை கொடுக்கும். குழந்தைகளை முற்றிலும் தனிமையாக விட்டு விடாமல், பெற்றோர்களின் கண்காணிப்புகளுடன் கூடிய தனிமையை அனுமதிக்கலாம். 
இந்திய குழந்தைகளுக்கு கட்டுப்பாடுடன் சுதந்திரம் அளிப்பது அவர்களின் மன தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் வளர உதவும். இருந்தும் இந்திய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதையே விரும்புகின்றனர். அது அவர்கள் தங்கள் குழந்தைகள் மேல் காட்டும் அன்பையும், பாசத்தையும் வெளிப்படுத்துவதாக உணர்கின்றனர். இதில் இருந்து முற்றிலும் விடுபடுவது கடினம் என்றாலும், குழந்தைகளுக்கான சுதந்திரமும், தனிமையும் அளிப்பது நல்லது. 

