தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/சில சந்தேகங்கங்கள்.... சில பதில்கள்...

சில சந்தேகங்கங்கள்.... சில பதில்கள்...

சில சந்தேகங்கங்கள்.... சில பதில்கள்...


PUBLISHED ON : பிப் 06, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 06, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என் குழந்தைக்கு பால் ஒவ்வாமை உண்டு. எனவே, சோயா பால் கொடுக்கிறேன். என் உறவினர், ஆட்டுப் பால் கொடுக்குமாறு கூறுகிறார். நான் இருதய நோயாளி. நானும் அந்தப் பாலை குடிக்கலாமா?

கனி, கே.கே.நகர்:



பால் ஒவ்வாமை என்பது, பாலில் உள்ள 'லாக்டோஸ்' என்ற பொருளை, உடல் ஏற்றுக் கொள்ளாமையால் ஏற்படுவது. ஆட்டுப் பால், மாட்டுப் பால் ஆகிய இரண்டிலுமே, 'லாக்டோஸ்' உண்டு. ஒரு சில குழந்தைகளின் உடல், மாட்டுப் பாலை விட, ஆட்டுப் பாலை ஏற்றுக் கொள்ளும். ஆட்டுப் பாலில், கொழுப்புச் சத்து குறைவு. ஒவ்வாமை ஏற்படுத்தும் காரணிகளும், இந்த பாலில் குறைவு. எனவே, 2 - 3 நாட்களுக்கு, ஆட்டுப் பால் கொடுத்துப் பார்ப்பதில் தவறில்லை. வயிற்றுப்போக்கு ஏற்படாதவரை தொடரலாம். உபாதை ஏற்பட்டால், சோயா பாலே கொடுக்கலாம்.



என் மகனின் காதிலிருந்து பழுப்பு நிற ரத்தம் வெளியேறுகிறது. இதனால் வலியோ, காய்ச்சலோ ஏற்படுவதில்லை. இரவு நேரத்தில் தலையணை எல்லாம் ரத்தமாகிறது...

தேவி, சென்னை:



முதலில் அது ரத்தம் தானா என்பதை பரிசோதிக்க வேண்டும். காதிலிருந்து பழுப்பு நிறத்தில் மெழுகு போன்ற பொருள் சுரக்கும். அது காதில் நிறைந்து விட்டால், நீர்த்து போய், காதிலிருந்து வெளியேறும். எனவே, அதை கவனிக்கவும். காதிலிருந்து ரத்தம் வெளியேறினால், அது ஆபத்தின் அறிகுறி. காதில் தொற்றோ அல்லது காயமோ ஏற்பட்டிருக்கலாம். சிறு பையனாக இருப்பதால், காதில் ஏதாவது பொருளை போட்டு கொண்டிருக்கலாம். சுத்தம் செய்யும் போது, காயம் ஏற்பட்டிருக்கலாம். எந்த கசிவும் கவனிக்க வேண்டியதே. எனவே, காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை நிபுணரிடம், உடனடியாக காண்பியுங்கள்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us