PUBLISHED ON : ஆக 24, 2020

4 - 8
கர்ப்பத்தின் நான்கு - எட்டு வாரங்களில், தினமும் வெறும் வயிற்றில், ஒரு டம்ளர் வடிகஞ்சியில், அரை டீ ஸ்பூன் நெய் கலந்து குடிக்கலாம்.
9 - 13
கர்ப்பத்தின் ஒன்பது முதல், 13 வாரங்களில், ஒரு டம்ளர் வடிகஞ்சியுடன், அரை டீ ஸ்பூன் வெண்ணெய் கலந்து குடிக்க வேண்டும்.
14 - 19
கர்ப்பத்தின், 14வது வாரத்தில் துவங்கி, 19வது வாரம் வரை, ஒரு டம்ளர் வடிகஞ்சியில், ஒரு ஸ்பூன் நெய், அரை டீ ஸ்பூன் வெண்ணெய் கலந்து குடிக்க வேண்டும்.
19 - 23
கர்ப்பத்தின், 19வது வாரத்தில் துவங்கி, 23ம் வாரம் வரை, ஒரு டம்ளர் வடிகஞ்சியில், அரை டீ ஸ்பூன் வெண்ணெய், கால் ஸ்பூன் நெய் கலந்து குடிக்க வேண்டும்.
24 - 28
இருபத்தி நான்காவது வாரத்திலிருந்து, 28வது வாரம் வரை, ஒரு டம்ளர் வடிகஞ்சியுடன், அரை டீ ஸ்பூன் தேன் கலந்து குடிக்கலாம்.
29 - 33
இருபத்தி ஒன்பதாவது வாரத்தில் இருந்து, 33வது வாரம் வரை உள்ள கர்ப்ப காலத்தில், ஒரு டம்ளர் வடிகஞ்சியுடன், ஒரு டீ ஸ்பூன் அரைத்த தனியா விதை விழுது கலந்து குடிக்கலாம்.
34
முப்பத்தி நான்காவது வாரத்தில் துவங்கி, பிரசவ நாள் வரை, ஒரு டம்ளர் வடிகஞ்சியில், அரை டீ ஸ்பூன் வெண்ணெய் கலந்து குடிக்க வேண்டும்.
* கர்ப்பம் உறுதியாகி, 30 வாரங்கள் வரையிலும், உணவில் அல்லது பாலில் குங்குமப்பூ போட்டு குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
* தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில், வறுத்த, பொரித்த உணவுகள் சாப்பிடுவதையும், குளிர்ந்த உணவுகள் மற்றும் பானங்கள் குடிப்பதையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்; இது, குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
* கசகசா, ஓமம் இரண்டையும் சம அளவு எடுத்து, வெறும் வாணலியில் லேசாக வறுத்து, பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதை, தினமும் அரை டீ ஸ்பூன் என்ற அளவில், தொடர்ந்து இரண்டு மாதங்கள் சாப்பிட்டால், தாய்ப்பால் நன்கு சுரக்கும்; உடலில் உள்ள நச்சுக் கழிவுகளை நீக்கும் தன்மையும் இதற்கு உண்டு.
* பூண்டு, வெந்தயம், மல்லி தழை, ரொட்டி, ஆட்டு ஈரல், சின்ன வெங்காயம், கறுப்பு உளுந்து, பனை வெல்லம், முருங்கை பூ இவையெல்லாம் தாய்ப்பால் சுரப்பதற்கு ஏற்ற உணவுகள்.
* தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில், அதிக அளவு திரவ உணவுகளும், அதிக நீர்ச்சத்து மிக்க உணவுகளும் சாப்பிட வேண்டும். தேங்காய், பருப்பு வகைகளை முடிந்த அளவுதவிர்ப்பது நல்லது.
* தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில், குழந்தைக்கு உடல் நலம் சரியில்லை என்றால், முடிந்த வரை அம்மாவுக்குச் சிகிச்சை தருவதே நல்லது.
* காரணம் இல்லாமல் குழந்தை அழுதால், குழந்தையின் தாய், தன் வாயில் சீரகத்தை போட்டு நன்கு மென்று, அந்த காற்றை, குழந்தை யின் வாயில் ஊத வேண்டும்; கண்டிப்பாக இதை தாய் மட்டுமே செய்ய வேண்டும்.
* உலர் திராட்சையில் ஊற வைத்த தண்ணீர், குழந்தைக்கு ஏற்படும் மலச் சிக்கலுக்கு நல்ல தீர்வாக இருக்கும். குழந்தையை பருத்தி துணியில் மட்டுமே படுக்க வைக்க வேண்டும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் தேங்காய் எண்ணெய் தடவி, குளியல் செய்வது, குழந்தைக்கு நல்லது.
* குழந்தையின் வாயில் பால் வாசனை அப்படியே இருக்கிறது, குழந்தையை துாக்கும் போது, வழக்கத்தை விட சற்று பளுவாக உணர்கிறீர்கள் எனில், பூஞ்சை தொற்று ஏற்பட்டு இருக்கலாம். பிரசவத்திற்கு பின், அடுத்த ஆறு மாதங்கள், தாய்மார்கள் உடற்பயிற்சிகளை தவிர்ப்பது நல்லது.
டாக்டர்க.மது கார்த்தீஸ்,
சித்த மருத்துவர், சென்னை.
99944 93687

