தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கனவு தவிர்... நிஜமாய் நில்! அரிதான விஷயம்... தெரிந்து கொள்வது அவசியம்!

கனவு தவிர்... நிஜமாய் நில்! அரிதான விஷயம்... தெரிந்து கொள்வது அவசியம்!

கனவு தவிர்... நிஜமாய் நில்! அரிதான விஷயம்... தெரிந்து கொள்வது அவசியம்!


PUBLISHED ON : டிச 03, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 03, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு ஏற்படக் கூடிய பிரச்னை, பால் கட்டி, மார்பு வீங்கி விடுவது. குழந்தை, பாலை முழுவதுமாக குடிக்காமல் போனால், பால் கட்டி, மார்பகங்களில் வீக்கம் ஏற்படுகிறது. தற்போது, 'ஸ்பெஷல் பம்பு'கள் உள்ளன. அதிகமாக சுரக்கும் பாலை, 'பம்ப்' செய்து எடுத்து விடலாம். சில சமயம், மார்பு காம்புகளில் வெடிப்பு ஏற்பட்டு, புண்ணாகி, வலி உண்டாகும்; இந்த வலியால், பால் கொடுப்பதை தவிர்த்து விடுவர். இதனால், பால் கட்டி, மேலும் சிரமப்பட வேண்டியிருக்கும். மார்பு காம்பு, ஏன் வெடித்து, புண்ணாகி விடுகிறது என பார்த்தால், சரியான விதத்தில், குழந்தை பால் குடிக்காததால் தான். மார்பு காம்பின் நுனியை மட்டும் பற்றி, குழந்தை பாலை உறிஞ்சுவதால், அது புண்ணாகி விடுகிறது. இந்த புண்ணிற்கு, நல்ல மருந்தும் தாய்ப்பால் தான். தாய்ப்பாலை ஒரு சொட்டு எடுத்து, புண்ணின் மேல் தடவினால், சீக்கிரமே ஆறிவிடும்; தேவைப்பட்டால், வலி நிவாரணி எடுத்துக் கொள்ளலாம். பால் கொடுப்பதற்கு முன், ஐஸ் கட்டி வைத்து ஒத்தடம் கொடுத்தால், தற்காலிக தீர்வு கிடைக்கும். மரத்து விடும். பால் கொடுத்த பின், வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம். மார்பு காம்பு புண்ணாகும் போது, சில சமயங்களில், கிருமிகள் வளர்ந்து தொற்று ஏற்படும். மார்பு வீங்கி, சிவந்து, காய்ச்சல் வந்து

கஷ்டப்படுவர்; ஆனால், பால் கொடுக்கும் பெண்களுக்கு, சில, 'ஆன்டிபயாடிக்'

மருந்துகளை கொடுக்கக் கூடாது. அதனால், மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே, மருந்து சாப்பிட வேண்டும். சில சமயங்களில் சீழ் கட்டி விடும். 'அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்' செய்தால், சீழ் கட்டி உள்ளதா என, தெரிந்து விடும். அந்த இடத்தை மட்டும் மரத்து போகச் செய்து, ஊசி மூலமாகவே, சீழ் கட்டியை எடுத்து விடலாம். ஊசி மூலம் எடுக்க முடியாத

பட்சத்தில், ஆப்பரேஷன் செய்து, சீழ் கட்டியை எடுத்து விடுவோம். எடுத்த திரவத்தை பரிசோதனை செய்து, என்ன கிருமியால், இந்த தொற்று ஏற்பட்டுள்ளது என தெரிந்து, அதற்கு ஏற்ற சிகிச்சையை செய்ய வேண்டும். பால் கட்டுவதற்கும், தொற்று ஏற்படுவதற்கும், கேன்சருக்கும் சம்பந்தமில்லை; இது, பின்னாளில் கேன்சர் ஆகிவிடும் என, பயப்படவும் தேவையில்லை. வாய்ப்பு, வெகு அரிது தான் என்றாலும், கேன்சர் வந்து விடுமோ என்ற பயம் இருக்கக் கூடாது; விழிப்புணர்வு தான் வேண்டும்.

டாக்டர் செல்வி ராதாகிருஷ்ணா

மார்பக புற்றுநோய் சிறப்பு மருத்துவர், சென்னை.

selvi.breastclinic@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us