தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/நாங்க இப்படிதானுங்க! அறிவு தந்தது அழகி பட்டம்!

நாங்க இப்படிதானுங்க! அறிவு தந்தது அழகி பட்டம்!

நாங்க இப்படிதானுங்க! அறிவு தந்தது அழகி பட்டம்!


PUBLISHED ON : டிச 03, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 03, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சீரான உடற்பயிற்சி, சரியான, 'டயட்' இரண்டும், இந்த ஆண்டு, உலக அழகி பட்டத்தை வெல்வதற்கு முக்கிய காரணம். மானுஷிக்கு பிடித்தது, 'பிளாங்க்' உடற்பயிற்சி. இந்த உடற் பயிற்சியில், உடம்பில் உள்ள ஒவ்வொரு திசுவும் பலன் பெறுகிறது. இதை, வாரத்தில், நான்கு நாட்கள் செய்கிறார். இது தவிர, யோகா, ரன்னிங் தவறாமல் செய்கிறார்.

'டயட்' விஷயத்தில், ஓட்ஸ், தயிர், பழங்கள், காய்கறிகள், அவித்த மீன், சிக்கன், முட்டை வெள்ளைக் கரு, அரிசி சாதம், கோதுமை சப்பாத்தி என, சீரான இடைவெளியில், குறைவாக சாப்பிடுகிறார். 'உடற்பயிற்சியோடு, சத்தான சாப்பாடு இருந்தால் தான், புத்திசாலியாக இருக்க முடியும்' என, மானுஷி சொல்வது சரி தான். 'அதிக சம்பளம் தரும் பதவி எது?' என்ற கேள்விக்கு, 'எல்லா அம்மாக்களும், தங்கள் குழந்தைகளுக்காக நிறைய தியாகங்களைச் செய்கின்றனர். பணத்தை கொண்டு மதிப்பிட முடியாதது என்றாலும், மிக உயர்ந்த சம்பளம் பெறத் தகுதி உடையது, அம்மா ஸ்தானம்...' என்ற மானுஷி சில்லாரின் பதில் தானே, உலக அழகி பட்டத்தை, 17 ஆண்டுகளுக்கு பின், இந்தியாவிற்கு பெற்றுத் தந்துள்ளது!

- மானுஷி சில்லார்,

மருத்துவ மாணவி, உலக அழகி - 2017


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us