தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கனவு தவிர்... நிஜமாய் நில்! - சார்ந்திருப்பது சரியில்லையே!

கனவு தவிர்... நிஜமாய் நில்! - சார்ந்திருப்பது சரியில்லையே!

கனவு தவிர்... நிஜமாய் நில்! - சார்ந்திருப்பது சரியில்லையே!


PUBLISHED ON : நவ 18, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 18, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெண்களுக்கு பக்கவாதம் வருவதற்கான அபாயத்தை, பல வகைகளாகப் பிரித்துப் பார்க்க வேண்டியுள்ளது. கர்ப்பக் காலத்தில் வரும் சர்க்கரை பிரச்னை, உயர் ரத்த அழுத்தம், உடம்பில் அதிகம் நீர் கோர்ப்பது, இவையெல்லாம் பெண்களுக்கு பக்கவாதம் வருவதற்கான சாத்தியங்களை அதிகப்படுத்தும். அடுத்து, 'மெனோபாஸ்' எனப்படும் மாதவிடாய் நிற்கும் பருவத்தில் உள்ள பெண்களுக்கும், அபாயம் அதிகமாக உள்ளது.

மாதவிடாய் காலத்தில், அதிகமாக சுரக்கும், 'ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்' பெண்களுக்கு பாதுகாப்பு கவசமாக உள்ளது. மாதவிடாய் முடியும் பருவத்தில் அல்லது முடிந்த பின், இந்த ஹார்மோன் சுரப்பு குறைவாக இருக்கும். இதனால், ஆண்களை ஒப்பிடும் போது, பக்கவாதம் வரும் அபாயம் பெண்களுக்கு இந்த பருவத்தில் அதிகம்.

இதில் நாம் கவனிக்க வேண்டியது, பக்கவாதம் பெண்களை பாதிக்கும் போது, பெண்கள் மன அழுத்தத்திற்கு அதிகம் உள்ளாகின்றனர். நம்முடைய கலாசாரத்தில், ஆண்களுக்கு பாதிப்பு வந்தால், பெண்கள் அவர்களை பாதுகாப்பாக பார்த்துக் கொள்வர்.

அதே நேரத்தில், பெண்களுக்கு, உடல் ரீதியிலான பெரிய பாதிப்பு ஏற்பட்டால், அவர்களை பெரும்பாலும் யாரும் பார்த்துக் கொள்வதில்லை என்பதே பொதுவான நியதி.

என்னுடைய அனுபவத்தில், பக்கவாதம் பாதிப்பு ஏற்பட்ட மனைவியருக்கு, மிக நனறாக கவனித்துக் கொள்ளும் கணவர்கள் இருக்கின்றனர்.

ஆனலும், அந்த மனைவியருக்கு, 'ஐயோ, நான் தானே என் குடும்பத்திற்கு செய்ய வேண்டும். எனக்கு இவர் செய்வது மாதிரி ஆகி விட்டதே' என, மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். நம்முடைய சமூக சூழல் அப்படி உள்ளது.

செய்வதற்கு தயாராக, ஆண் இருந்தாலும், பெண்களால் ஏற்க முடிவதில்லை. குடும்பம் என்றாலே, வீட்டைச் சுற்றி நடப்பது எல்லாம், பெண்களின் கடமை என்பதாகவே இருக்கிறது. 'மற்றவர்களை சார்ந்து விட்டோமே' என்ற, குற்ற உணர்ச்சி பெண்களிடம் அதிகம்.

மேற்கத்திய நாடுகளை ஒப்பிடும் போது, நமக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம், உடல் பருமன் ஆகியவை நம் மரபணுவிலேயே உள்ளது. எனவே, சமச்சீரான உணவு, உடற்பயிற்சி என்ற, ஒழுங்கு முறையை கடைப்பிடிப்பது, குறிப்பிட்ட வயதிற்கு மேல், மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது என, ஆரோக்கியமான வழிமுறைகளை கடைப்பிடித்தால், உடல் பிரச்னைகளை தவிர்க்கலாம். பிரச்னை வந்தபின், பார்த்துக் கொள்ளலாம் என்ற, அலட்சியம் கூடாது. பல பெண்களுக்கு, பக்கவாதம் பாதிப்பு வந்த பிறகே, உயர் ரத்த அழுத்தம் இருப்பது தெரிய வருகிறது.

சர்க்கரை, ரத்த அழுத்தம் இல்லாத பெண்களைக் காட்டிலும், இந்த பிரச்னை இருப்பவர்களுக்கு பக்கவாத பாதிப்பு அதிகம். மாதவிடாய் நின்ற பின், ஆண்கள் அளவிற்கு, பெண்களுக்கும் பதிப்பு உள்ளது.



டாக்டர் புவனேஸ்வரி ராஜேந்தர்

நரம்பியல் சிறப்பு மருத்துவர், சென்னை.

bhuvana1675@hotmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us