sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

"இருமலுக்கு மனஅழுத்தமும் காரணமாகலாம்'

/

"இருமலுக்கு மனஅழுத்தமும் காரணமாகலாம்'

"இருமலுக்கு மனஅழுத்தமும் காரணமாகலாம்'

"இருமலுக்கு மனஅழுத்தமும் காரணமாகலாம்'


PUBLISHED ON : மே 05, 2013

Google News

PUBLISHED ON : மே 05, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிளஸ் 2 படிக்கும் எனது தம்பி மகளுக்கு ஒரு மாதமாக பகலில் இருமல் உள்ளது. இரவில் இல்லை. பல மருந்துகள் சாப்பிட்டும் இருமல் குறையவே இல்லை. என்ன காரணம்?

இன்று குழந்தைகளுக்கு படிக்கும் சுமை அதிகமாக உள்ளது. வீட்டிலும், பள்ளியிலும் அவர்களுக்கு போதிய ஓய்வு கிடைப்பதில்லை. முதல் மதிப்பெண் நோக்கத்தில் பெற்றோர் அவர்களிடம் கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர். ஆனால் முழுமையாக அவர்களுடன் ஒரு மணிநேரம் கூட இருப்பதில்லை. இதனால் மனதளவில் அவர்கள் பாதிப்படைகின்றனர். ஒரு குழந்தையால் எல்லா சவால்களையும் செயல்படுத்த முடியாதபோது, மன அழுத்தத்தால் இருமல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. பகலில்தான் அதிக இருமல் காணப்படும். இரவில் இருப்பதில்லை. இதற்கு மாத்திரை, மருந்துகள் உதவாது. உங்கள் குழந்தைக்கு பெற்றோரின் ஆதரவு முக்கியம். மேலும் ஒரு நல்ல மனநல ஆலோசகரிடம் அழைத்துச் செல்லுங்கள். படிப்பைத் தவிர ஓய்வு, விளையாட்டுக்கு முக்கியத்துவம் குழந்தைகளுக்கு அவசியம்.

என் தந்தைக்கு இருதய வால்வில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு வாரமாக வறட்டு இருமல் இருந்தது. அவரை பரிசோதித்த டாக்டர்கள், நுரையீரலில் நீர் இருக்கிறது என்று கூறினர். இதற்கு என்ன செய்ய வேண்டும்?

இருதயத்தில் நோய் ஏற்பட்டு இருந்தால் சில சமயங்களில் நுரையீரலிலும் பாதிப்பு ஏற்படும். நுரையீரலை சுற்றி அல்லது நுரையீரலுக்குள் நீர் கோர்வை காணப்படும். இதனால் வறட்டு இருமல் ஏற்படும். இதற்காக நீங்கள் மருந்துகள் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. உங்கள் இருதய நோயை கட்டுப்படுத்த மருந்துகள் எடுத்துக் கொண்டால் இருமல் தானாக சரியாகிவிடும்.

இதேபோல சிறுநீரக பாதிப்பு இருந்தாலும் நுரையீரலில் நீர்கோர்வை ஏற்படும். டயாலிசிஸ் போன்ற சிறுநீரகத்திற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டால் போதும். நுரையீரல் பாதிப்பு சரியாகிவிடும். ஆகையால் நீங்கள் உங்கள் இருதய வால்வு பிரச்னைக்கான சிகிச்சையை உடனடியாக துவக்கினால் உங்கள் வறட்டு இருமல் சரியாகிவிடும்.

என் வேலை நிமித்தமாக, இரவில் ஒரு மணிக்கு தூங்க செல்கிறேன். அதிகாலை 5 மணிக்கு எழுந்து, பணியை துவங்குகிறேன். நான்கு மணி நேரமே தூங்குவதால், பின்னாளில் ஏதேனும் பிரச்னைகள் வரவாய்ப்புள்ளதா?

ஒரு மனிதனுக்கு உணவு எவ்வளவு முக்கியமோ, அந்தளவு தூக்கமும் முக்கியம். தினமும் ஒருவர் 7 மணி நேரம் தூங்க வேண்டும். தூக்கத்தால் மனமும், உடலும் சீரடையும். உற்சாகம் பெறும். தேவையான ஓய்வு இல்லாவிட்டால், பின்னாளில் உடல் உறுப்புகளின் செயல் திறன் குறைய வாய்ப்புள்ளது. 'ஸ்லீப் அப்னீசியா ஸ்டிரெஸ், டிப்ரஷன் மற்றும் சில இருதய நோய்கள் வரவாய்ப்புகள் உள்ளன.

ஒரு மனிதன் வார நாட்களில் 5 மணி நேரம் தூங்கி விட்டு, வார இறுதியில் 10 மணி நேரம் தூங்கினாலும் நம் உடல் உறுப்புகளுக்கு சரியான ஓய்வு கிடைப்பதில்லை. தூக்கமின்மையே கொடிய பல வியாதிகளின் மூலகாரணம். டிப்ரஷனால் பாதிக்கப்பட்ட சிலர், தூக்க மாத்திரையை பயன்படுத்தி தூங்குவதும் சரியானதல்ல.

- டாக்டர் எம்.பழனியப்பன்,

மதுரை. 94425-24147






      Dinamalar
      Follow us