தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/அமிலத்தை அதிகரிக்கும் மன அழுத்தம்!

அமிலத்தை அதிகரிக்கும் மன அழுத்தம்!

அமிலத்தை அதிகரிக்கும் மன அழுத்தம்!


PUBLISHED ON : அக் 30, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 30, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அல்சர், வாயுத் தொல்லை இரண்டும், 80 சதவீதம் பேருக்கு இருக்கிறது. மிதமாக, தீவிரமாக, லேசாக என்று, எந்த அளவிற்கு பாதிப்பு இருக்கிறது என்பது தான் பிரச்னை. 'டீன் ஏஜ்' துவங்கி எல்லா வயதினருக்கும் அல்சர் பிரச்னை உள்ளது. இதற்கு உணவுப் பழக்கம் மட்டுமே காரணம் இல்லை.

இளம் வயதினரிடம் அதிகமாகப் காணப்படும் பிரச்னை, மன அழுத்தம். இதனால் முதலில் பாதிக்கப்படுவது துாக்கம். வேலைப் பளு, குடும்ப பொறுப்பு, இவை அனைத்தையும் விட கம்ப்யூட்டர், போன் ஸ்கிரீன் பார்க்கும் நேரம் முழுமையாக ஆக்கிரமித்து உள்ளது.

இதனால் சரியான, போதுமான துாக்கம் இல்லை. துாக்கம் குறைந்தால், முதலில் பாதிக்கப்படுவது வயிறு. வயிற்றில் நிறைய அமிலம் சுரக்கும். இது அல்சர், வாயுத் தொல்லை, அமிலம் மேலேறுதல் என்று பல பிரச்னைகளுக்கு வழி செய்யும். மன அழுத்தமும் இருந்தால், சாதாரணமாக சுரக்கும் அமிலத்தை விடவும் அதிக அளவில் சுரக்கும்.

எப்படி தவிர்ப்பது?



என்ன பிரச்னை இருந்தாலும், வயிறு நலனை மனதில் வைத்து, தற்காலிகமாகவாவது பிரச்னைகளை மறந்து, குறைந்தது ஆறு மணி நேரம் துாங்க வேண்டும். ஆழ்ந்த துாக்கம் இருந்தாலே உடம்பில் உள்ள 90 சதவீத பிரச்னைகள் சரியாகி விடும்.

இது தவிர, காலையோ, மாலையோ, அரை மணி நேரம் சுறுசுறுப்பாக நடை பயிற்சி செய்வதும் முக்கியம். உடற்பயிற்சி இருந்தால், அட்ரினலின் சுரப்பது குறைந்து, உடம்பில், மனதில் உள்ள அழுத்தம் குறைந்து விடும்; துாக்கமும் நன்றாக வரும்.

- 'சயின்ஸ் டிரான்ஸ்லேஷனல் மெடிசின்!'

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us