PUBLISHED ON : அக் 30, 2022

கர்ப்ப கால சர்க்கரைக் கோளாறால், 20 ஆண்டுகளுக்கு முன், 2 - 4 சதவீத பெண்கள் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று பாதிப்பு பல மடங்கு அதிகரித்து உள்ளது.
கர்ப்பம் தரிக்கும் சமயத்தில், உடல் பருமன் அதிகம் இருப்பது, கருக் குழாயில் நீர்க்கட்டிகள், கணையம் சுரக்கும் இன்சுலின் சேமிப்பு உடலில் குறைவாக இருப்பது ஆகியவை கர்ப்ப காலத்தில் சர்க்கரைக் கோளாறு ஏற்பட பொதுவான காரணங்கள்.
கர்ப்ப காலத்தில் சர்க்கரைக் கோளாறு இருந்தது; குழந்தை பிறந்ததும் சரியாகி விட்டது என்று நினைத்து, அதன்பின் கவனிக்காமல் விட்டு விடுவர். கர்ப்ப காலத்தில் வரும் சர்க்கரைக் கோளாறுகளால் பாதிக்கப்படும் பெண்களில், 50 சதவீதம் பேருக்கும், அவர்களின் குழந்தைகளுக்கும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் சர்க்கரைக் கோளாறு வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
அமுதா ஹரி,
மகப்பேறு மருத்துவர்,
சென்னை.
