
ஒருவருக்கு கொடுக்கப்பட வேண்டியது அல்லது கிடைக்க வேண்டியது என்று சொல்லப்படுபவற்றை, உரிமை என்கிறோம். அது, இயல்பாகவே, தானாகவே கிடைக்க வேண்டியது. சுற்றுப்புறம் அல்லது சமூகம், அவற்றை தனிமனிதன் அல்லது உயிரினத்திற்கு அளிக்க முன்வர வேண்டும். இதை வைத்துத் தான் சிலவற்றை, அடிப்படை உரிமை என்கிறோம்.
ஆனால், உலகம் மற்றும் சமூகம், தானாக முன்வந்து எதையும் அளிப்பதில்லை. எனவேதான், அடிப்படை உரிமை, சட்டப்படி உரிமையாக பரிமாணம் எடுத்தது.
ஒவ்வொருடைய வயது, பால், அவர்களது அடையாளம், பங்கு இவற்றை பொறுத்து, அடிப்படை மற்றும் சட்டப்படியான உரிமைகள் வரையறுக்கப்பட்டன.
மனிதனின் தேவைகள், ஆசைகள் மற்றும் பேராசைகள், அதை நடைமுறைப்படுத்த, இடையூறாக அமைந்தன. அதனால், இயல்பாக கிடைக்க வேண்டிய ஒன்றை, மிகவும் பிரயத்தனப்பட்டு, பெற வேண்டியிருக்கிறது. அதைத்தான் போராட்டம் என்கிறோம்.
பொதுவாகவே, மனிதன், எதையும் இயல்பாக, சிரமமின்றி இலகுவாக பெற
வேண்டும் என்று கருதுகிறான். உரிமைகள் கொடுக்கப்பட வேண்டும்; அது கடமை. அப்படி கொடுக்கப்படாவிடின், போராடியாவது பெற வேண்டும். அதற்கு பெயர் மரியாதை.
94440 34647